கிட்டதட்ட 30 ஆண்டுகளில் முதல் முறையாக சீனா தனது பொருளாதாரத்திற்கான வளர்ச்சி இலக்கை நிர்ணயிப்பதை கைவிட்டுள்ளது. இது சீனா பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல விஷயம் அல்ல.
இது சீனாவுக்கு ஒரு மோசமான செய்தி என்றும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா எனும் தொற்று நோய் மற்றும் முடங்கி போன வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளது சீனா.
கடந்த ஆண்டு சீனா பொருளாதாரம் 6.1 சதவீத வளர்ச்சியினைக் கண்டது. ஆனால் இது வுகானில் கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக, மோசமான விளைவுகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக மார்ச் காலாண்டில் சீனா பொருளாதாரம் 6.8 சதவீத சரிவைக் கண்டுள்ளது
உற்பத்தி அதிகரிப்பு
லாக்டவுன் முடிவடைந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் தொழில் துறையில் சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தொழில்துறை உற்பத்தி 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி நுகர்வும் மிகவும் சாதாரண நிலைக்கு திரும்பியது. அதோடு சில்லறை விற்பனையும் தொற்று நோய்க்கு முன்பு இருந்ததை விடவும் குறைவாகவே உள்ளது.
வளர்ச்சி இவ்வளவு தான்?
இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் சீனாவின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளது. இதே மற்றவர்கள் 2 - 3 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் நம்புவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1970ல் இருந்து சீனாவின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 10 சதவீதமாகும்.
பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்
ஆனால் கொடிய கொரோனா என்னும் அரக்கனாலும், தொடர்ச்சியான பொருளாதார சரிவுகளினாலும், பொருளாதார வீழ்ச்சியை இன்னும் விரிவுபடுத்தும் விதமாகவும் அமெரிக்கா சீனா பதற்றம் இருந்து வருகிறது. ஆக இது பொருளாதார வீழ்ச்சிக்கும் இன்னும் வழி வகுக்கும் விதமாக உள்ளது. ஏற்கனவே வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதார நிலைக்கு மத்தியில், சீனாவினை கொரோனா இன்னும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது எனலாம்.
குறைந்த பொருளாதார வளர்ச்சி
சீனாவின் அரசியல் பதற்றம் மற்றும் அது உருவாக்கும் சமூக பதற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, சீனா எப்போதும் உயர் வளர்ச்சிக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. கிட்டதட்ட 400 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 5.50 டாலர் பொருளாதாரத்தினை மட்டுமே உருவாக்குகின்றனர்.
அதிகளவு கடன்
மேலும் சீனாவின் கார்ப்பரேட் துறையானது உலகின் மிக உயர்ந்த அளவு ஜிடிபியில் கடன் உள்ளவற்றில் ஒன்றாகும். இது மொத்த ஜிடிபியில் 160 சதவீதத்திற்கும் அருகில் இருந்ததாகவும், இது சீனாவின் நிலைத்தன்மையை அச்சுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் சீனா அன்னிய செலவாணியைக் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சீர்திருத்த நடவடிக்கைகள் முடக்கம்
இதற்கிடையில் வர்த்தக போர் சீனாவின் வர்த்தக வளர்ச்சியினை கடந்த ஆண்டு முடக்கியது எனலாம். இதனால் சீனா பொருளாதார வளர்ச்சி சரிந்து வந்தது. இதன் காரணமாக நிதி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகளை இன்னும் சிக்கலாக்கியது. இதன் காரணமாக அதன் வங்கி அமைப்பிற்குள் தள்ளுபடியும் கட்டாயப்படுத்தியது. மேலும் உள்கட்டமைப்பு, வரி சலுகைகள் மற்றும் பிற தூண்டுதல் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியது. ஆக இது கொரோனா காலத்தில் சீனாவின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்தியது.
சீனா திட்டம்
சீனா இந்த ஆண்டில் சுமார் 9 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திருத்தப்பட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இது கடந்த 2013க்கு பிறகு மிகக் குறைவானது என்றும் கூறப்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீத பட்ஜெட் பற்றாக்குறையில் 3.6 சதவீதத்தினை இலக்காகக் கொண்டுள்ளது. இது 2019ல் 2.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விநியோக சங்கிலியில் மாற்றம்
இதற்கிடையில் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் உலகளாவிய விநியோக சங்கிலியை மாற்றியமைத்துள்ளது. இது அமெரிக்கா நிறுவனங்கள் மட்டும் அல்ல, சீனாவினை சார்ந்திருக்கும் மற்ற நிறுவனங்களும் குறைக்க முயல்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அந்த செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு திரும்பவில்லை. மாறாக ஆசியா மெக்ஸிகோ மற்றும் பிற பொருளாதாரங்களுக்கும் செல்வதாகவும் கூறப்படுகிறது.
பொருளாதாரம் இடத்தினை தக்க வைத்துக் கொள்ளுமா?
ஆனாலும் அமெரிக்கா தன் ஆட்டத்தினை இதோடு நிறுத்துவதாகவும் தெரியவில்லை. தொடர்ந்து கொரோனாவை பரப்பியது சீனா தான் என தொடர்ந்து விரோத போக்கினை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சீனா கடந்த 40 ஆண்டுகாலமான தக்க வைத்துக் கொண்டு வரும் உலகின் இரண்டாவது பொருளாதாரம் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications