என்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங் : சர்வதேச அளவில் இரண்டாவது காலாண்டில் சீனாவின் மெதுவான வளர்ச்சி அதன் பலவீனமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றும், மேலும் அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர், உலகின் மிகப்பெரிய இரண்டாவது பெரிய பொருளாதார நாட்டின் பொருளாதாரத்தினை மிகவும் பலவீனப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மந்தமான நிலையில் இருக்கும் பொருளாதாரம், மேலும் சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங்கை, அமெரிக்காவுக்கு எதிராக போராடுவதை இன்னும் கடினமாக்குகிறது என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் தேசிய புள்ளி விவரம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஜி.டி.பி இரண்டாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது முதல் காலாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் ஜி.டி.பி எதிர்பார்ப்பு?

அரசின் ஜி.டி.பி எதிர்பார்ப்பு?

மொத்த ஆண்டிற்காக ஜி.டி.பி விகிதம் 6.0 முதல் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் சீனா அரசு இலக்காக வைத்துள்ளது. எனினும் கடந்த 2018ம் ஆண்டின் சீனாவின் ஜி.டி.பி 6.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க.. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்து கொண்டிருக்கும் வர்த்த போரால் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் பொருளாதார நிலைமைகள் இன்னும் கடுமையாக உள்ளன. அதோடு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்து வருகிறது. இதனால் பொருளாதார மந்தம் இன்னும் நீடிக்கவே வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா புதிய திட்டம்

சீனா புதிய திட்டம்

பெய்ஜிங் உள்நாட்டு பொருளாதாரத்தை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்றும், பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் உள்நாட்டு மந்த நிலையை ஈடுகட்டவும், வெளிநாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் போதுமானதாக இந்த நடவடிக்கைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்காவின் வர்த்தக யுத்தத்தால் மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மிக குறைவு தான்?

ஏற்றுமதி மிக குறைவு தான்?

ஒரு புறம் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, முதல் ஆறுமாதத்திற்கான ஏற்றுமதி மிக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சர்வதேச அளவிலான ஏற்றுமதி 0.1 சதவிகிதம் மட்டுமே ஏற்றம் கண்டது. எனினும் இனி வரும் மாதங்களில் பெய்ஜிங் அதன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, பலஅதிரடியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதாரம் குறித்த தரவுகளில் பெய்ஜிங்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி!

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி!

சீனாவின் தொழில்துறை உற்பத்தி தற்போது சற்று அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த மே மாதத்தில் 5.0 ஆக இருந்த உற்பத்தி விகிதம், ஜூன் மாதத்தில் 6.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு நிலையான சொத்து முதலீடும் கடந்த ஜனவரி - மே வரையிலான காலத்தில் 5.6 சதவிகிதம் வளர்ச்சி மட்டுமே காணப்பட்டது. ஆனால் இதுவே ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 5.8 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஏற்றுமதி இறக்குமதியும் சுருங்கி விட்டது

ஏற்றுமதி இறக்குமதியும் சுருங்கி விட்டது

ஒரு புறம் சீனாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியானது 20 சதவிகித வளர்ச்சியிலிருந்து பின் வாங்கியுள்ளது. அதேசமயம் மொத்த ஏற்றுமதி இறக்குமதியும் வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நகர்புறத்தில் வேலைவாய்ப்பின்மையும் 5.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 5.0 சதவிகிதமாக இருந்தது.

ஜூன் மாதத்தில் சில்லறை வணிகம் அதிகரிப்பு

ஜூன் மாதத்தில் சில்லறை வணிகம் அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் சீனாவின் சில்லறை விற்பனை 9.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 8.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாமல் சீனாவின் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தியும் வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான முதலீடுகள் குறைந்துள்ளது

பெரிய அளவிலான முதலீடுகள் குறைந்துள்ளது

கடந்த காலாண்டில், கார் உள்பட பெரிய அளவிலான பொருட்கள் விற்பனை 12.4 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என சீனா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடான போர் உலகளாவிய அளவிலான ஒரு மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவின் பொருளாதாரத்திலும் மிக மந்த நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

மாறி மாறி கட்டணங்களை விதித்துக் கொண்டதில் வீழ்ச்சி

மாறி மாறி கட்டணங்களை விதித்துக் கொண்டதில் வீழ்ச்சி

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் இரண்டாவது காலாண்டில், 27 வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமாங்க.. இந்த இரு நாடுகளும் கிட்டதட்ட 360 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை ஈடுசெய்யும் அளவுக்கு ஒருவருகொருவர் மாறி கட்டணங்களை விதித்துக் கொண்டனர். அதிலும் இந்த ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 8 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s growth slides to weakest pace in almost three decades

China’s growth slides to weakest pace in almost three decades
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X