பெய்ஜிங்: சுமார் 6 மில்லியன் மக்கள் சீனாவில் கொரோனா லாக்டவுன் பிடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லாக்டவுன் மத்தியில் உலகின் மிகப்பெரிய ஐபோன் ஆலையும் தற்போது லாக்டவுன் வளையத்திற்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சீனாவின் பாக்ஸ்கான் ஆலையில் பெரிய போராட்டம் வெடித்தது.
இது கொரோனா காலத்தில் போனஸ் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த போனஸ் சரியாக கொடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. அதுமட்டும் அல்ல, ஊழியர்கள் மத்தியில் இடைவெளி என்பது சரியாக இல்லை, இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
வெளியேறத் தொடங்கிய ஊழியர்கள்
இதற்கிடையில் தனிமைப்படுத்த சரியான வசதிகள் என்பது தனியாக இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. ஆலையில் கொரோனா தொற்று என்பது பரவத் தொடங்கியிருப்பதாகவும், இதனால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் சம்பளம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உயிர் தான் முக்கியம் என்ற நிலையில் தான் வெளியேறத் தொடங்கினர்.
புதியதாக பணியமர்த்தல்
இதற்கிடையில் புதியதாக பாக்ஸ்கான் ஆலையில் பல நூறு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பரவலானது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து சூழலில் , ஊழியர்கள் அங்கேயே தங்கி பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் தான் ஊழியர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையானது போராட்டமாக வெடித்தது.
பாக்ஸ்கான் நிறுவனம் மன்னிப்பு
அதன் பிறகு தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும், இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பாக்ஸ்கான் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. நிறுவனத்தில் இருந்து வெளியேறத் தொடங்கிய ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்து அனுப்ப தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போனஸ் அறிவிப்பு
கொரோனா காரணமாக உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான், ஊழியர்களுக்கு போனஸ்களை அறிவித்தது. இதன் காரணமாகத் தான் அதிக செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் இந்த காலகட்டத்திலும் உற்பத்தி தடைபடாமல் இருக்க வேண்டும் என நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் தற்போது நிலைமை இன்னும் மோசமடையத் தொடங்கியுள்ளது எனலாம்.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
ஏனெனில் ஐபோன் ஆலைக்குள் தற்போது கொரோனா தாக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த பகுதியை விட்டு யாரும் வெளியேற கூடாது என தெரிவித்துள்ளது. ஆங்காங்கே செக் பாயிண்டுகள் மற்றும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது மேற்கொண்டு உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
திரும்ப வருவார்கள்
இந்த கட்டுப்பாடானது பாக்ஸ்கான் ஆலையில் போராட்டம் வெடித்த பிறகு வந்துள்ளதாகவும் தெரிகிறது. எனினும் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதை கொடுத்து வருவதாகவும், வெளியே சென்ற ஊழியர்கள் நிச்சயம் திரும்ப வருவார்கள் எனவும் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய வசதிகள் உண்டு
அதேபோல ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் போதிய வசதிகளை செய்துள்ளதாகவும், ஆக ஊழியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் தினசரி 30,000 பேருக்கு மேலாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications