சீனாவில் இருந்து உலகம் முழுக்க பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், இன்று மீண்டும் சீனாவினையே உலுக்கி வருகின்றது. இதனால் சீனாவின் பல முக்கிய தொழில் நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீனாவில் மீண்டும் உற்பத்தி பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில் நகரமான செங்ஸு நகரிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தப்பி ஓட்டம்
இந்த நகரத்தில் தான் டெக் ஜாம்பவான் ஆன ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கானின் ஆலையும் அமைந்துள்ளது. இங்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் பணிபுரிய அஞ்சி ஏராளமான ஊழியர்கள், அங்கிருந்து தப்பி செல்வதற்காக மதில் சுவர்களை தாண்டி குதிக்கும் வீடியோவானது சமூக வலைதளத்தில் பரவியது.
பெரும் பகுதி உற்பத்தி
இதில் ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்க்க முடிந்தது. மேலும் தங்களது பணியிடத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, புலம் பெயர் தொழிலாளார்கள் நடை பயணம் மேற்கொள்ள தொடங்கியவர்களையும், அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. பல ஊழியர்கள் சாலையின் ஓரத்தில் மெதுவாக நடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.
உற்பத்தி பாதிக்கலாம்
உலகின் ஐபோன் உற்பத்தியில் கிட்டதட்ட 50% இந்த பாக்ஸ்கான் ஆலையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சீனாவில் நிலவி வரும் இத்தகைய பதற்றமான நிலைக்கு மத்தியில் நவம்பர் மாதத்தில் ஐபோன் உற்பத்தியானது 30% பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் அதிருப்தி
கொரோனா காரணமாக அச்சத்தில் அதிருப்தியில் இருக்கும் ஊழியர்கள், தங்களது உடல் நிலை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும் பாக்ஸ்கான் ஆலையில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. கடந்த ஏழு நாட்களில் அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உற்பத்தியினை மீட்க மாற்று திட்டம்
இதற்கிடையில் செங்ஸு ஆலையில் குறைந்துள்ள உற்பத்தியினை மீட்க, ஷென்சென் ஆலையில் உற்பத்தியினை முடுக்கி விட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் செங்ஸு ஆலையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பாக்ஸ்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது உற்பத்தி மீண்டு வரும் என்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் பெரியளவில் உற்பத்தி பாதிக்கப்படாது எனவும் பாக்ஸ்கான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம்
மேலும் உற்பத்தி சரிவினைக் தடுக்க நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பார்வையாளார்கள் நிறுவனத்திற்கு வரும்போது கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் இன்னும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் உற்பத்தி சரிவு
ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் சீனாவின் உற்பத்தி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. இது சர்வதேச சந்தையில் தேவையானது சரிவில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு சீன நிறுவனங்களுக்கு பிரச்சனையாக மாறலாம். ஏற்கனவே சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசியால் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதற்கிடையில் லாக்டவுனால் மேற்கொண்டு தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்கு லாக்டவுன் மற்றும் போக்குவரத்து கட்டுபாடுகள், ஷிப்பிங் பிரச்சனையும் இருந்து வருகின்றது.
இந்தியாவுக்கு எப்படி லாபம்?
சீனாவில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாக மாறலாம். இந்தியாவில் ஏற்கனவே ஆப்பிளின் சில மாடல்கள் உற்பத்தியினை செய்ய தொடங்கியுள்ள நிலையில், மேற்கொண்டு உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கலாம்.
More From GoodReturns

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

ஒரு முறை சார்ஜ் போட்டா 40 மணி நேரம் நீடிக்கும்: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபோன் 18..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications