சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிக நெருக்கமான ராணுவத் தளபதியும், அந்நாட்டின் மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) துணைத் தலைவருமான ஜெனரல் ஜாங் யூஷியா (Zhang Youxia) மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தபட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். சீன அரசு ஒருவர் மீது குற்றம்சாட்டினால் என்ன நடக்கும் என்பது உலகிற்கே தெரியும், இப்படியிருக்கையில் Zhang Youxia மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஒட்டுமொத்த சீனாவை கதிகலங்கடித்துள்ளது என்றால் மிகையில்லை.
சீன பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, அந்நாட்டின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசியவிட்டதும், ராணுவத்தில் அதிகாரிகளை பதவி உயர்வு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதேபோல், மத்திய ராணுவ ஆணையத்தின் ஜாயின்ட் ஸ்டாஃப் துறைத் தலைவரான லியூ ஜென்லியும் (Liu Zenli) விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.

ஜாங் யூஷியா, ஜி ஜின்பிங்கின் மிக நம்பிக்கைக்குரிய நண்பராக கருதப்பட்டவர். கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொலிட்பீரோ உறுப்பினரான இவர், 1979இல் வியட்நாம் உடனான சீனாவின் மோதலில் நேரடியாகப் பங்கேற்று போர் அனுபவம் கொண்ட சில உயரதிகாரிகளில் மிகவும் முக்கியமானவர்.
இவர் மீதான விசாரணை சீன ராணுவ உயர்மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆய்வாளர்களும், வெளிநாட்டு ராணுவம், குறிப்பாக சீனா ராணுவம் இந்த பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தைவான் உஷார் நிலை உயர்த்தியது
ஜாங் யூஷியா விவகாரம் சீன ராணுவத்தில் பூதாகரமாக வெடித்திருக்கும் இதேவேளையில், தைவான் நாட்டை கைப்பற்றும் தனது கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை 6 மணியளவில் சீன ராணுவம் ஐந்து விமானங்கள் மற்றும் எட்டு கடற்படைக் கப்பல்கள் தைவான் நாட்டை குறிவத்து நிறுத்தியுள்ளது சீனா. இதனால் தைவான் தனது பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது.
சீன உள்நாட்டு அரசியல் பின்னணி
ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் ராணுவத்தில் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பல உயரதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் ஜாங் யூஷியா போன்ற ஜி ஜின்பிங்-கிற்கு மிக நெருக்கமானவரை விசாரிப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் உயர்மட்ட அதிகாரத்தில் புது போராட்டம் வெட்டித்திருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் (Zhang Youxia மீதான விராணையே ஜி ஜின்பிங் எதிராக யாரும் திரும்ப கூடாது என்பதற்காக கூட இருக்கலாம் என கருத்தும் நிலவுகிறது.
இதேவேளையில் அணு ஆயுத ரகசியம் கசிவு என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பதால் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா - சீனா மத்தியில் பணிப்போர் நிலவி வரும் வேளையில் இத்தகைய தகவல் கசிந்தால் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இதனால் தற்போது தைவான், ஜப்பான், தென் கொரியா போன்ற அண்டை நாடுகள் சீனாவின் அடுத்த நடவடிக்கைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications