சீன நாட்டின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் கோ நிறுவனத்தின் துணை தலைவரான யாங் ஹூயான் அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 4 நாட்களில் மட்டும் 2.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
ஜனவரி 5ஆம் தேதியின் படி யாங் ஹூயான் சீனாவின் 5வது மிகப்பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.
திடீர் வளர்ச்சி
கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் கோ நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை யாங் ஹூயான் வைத்துள்ளார்.
ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனப் பங்குகள் திங்கட்கிழமை 7.4 சதவீதம் வரையில் உயர்ந்து 2018இல் 17 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
4 பில்லியன் டாலர்
இதன் மூலம் 2018ஆம் நிதியாண்டின் 4 நாட்கள் வர்த்தகத்தில் சுமார் 2.1 பில்லியன் டாலர் வரையில் இவர்களது சம்பளம் உயர்ந்துள்ளது. ஜனவரி 5ஆம் தேதியின் படி யாங் ஹூயானின் சொத்து மதிப்பு 25.6 பில்லியன் டாலராக உள்ளது.
இளம் பில்லியனர்
மேலும் சீனாவின் பில்லியனர்கள் பட்டியலில் 36வயதான யாங் ஹூயான் இளம் பில்லியனராக உள்ளார். இவருக்குத் தற்போது கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் கோ நிறுவனத்தில் இருக்கும் பங்குகள் தனது தந்தை வழியாக வந்தது குறிப்பிடத்தக்கது.
கைமாற்றம்
யாங் ஹூயானுக்குத் தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை Yang Guoqiang 1992ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் கோ நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான பங்குகளை யாங் ஹூயானுக்குக் கைமாற்றப்பட்டது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications