அமெரிக்க அதிபர் ரஷ்யா கச்சா எண்ணெய்யை யாரும் வாங்க கூடாது மாறி மாறி வரியை விதித்து வரும் வேளையில், சீனா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு எதையும் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ரஷ்யா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இதை டிரம்ப் எதிர்த்து கேள்வி கேட்ட முடியாமல் மாடிக்கொண்டு உள்ளார்.
சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை ரஷ்யா, ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளிடம் இருந்து வாங்கி பூர்த்தி செய்து வரும் வேளையில், அமெரிக்கா இந்த 3 நாட்டு எண்ணெய் மீது கட்டுப்பாடுகள், தடைகள், வரிகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சீனா அமெரிக்காவின் மிரட்டல்களை கண்டுக்கொள்ளாமல் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது.

இதேவேளையில் இந்தியா மேற்கத்திய நாடுகளின் கடுமையான தடைகளால் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை வேகமாக குறைத்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி உடன் கிடைக்கும் குறைந்த விலை கச்சா எண்ணெய்யை சீனா பெருமளவு வாங்கி வருகிறது. இந்தியா ரஷ்யா எண்ணெய் வாங்குவதை குறைத்திருக்கும் வேளையில் இதை சீனா பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜனவரி மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தியது. ஏனெனில் ரிலையன்ஸ் சுத்திகரிக்கும் பொருட்களில் பெரும்பாலானவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
கப்பல் மற்றும் வர்த்தக தரவுகளின்படி, ஜனவரி மாதம் இதுவரை சீனா ரஷ்ய கச்சா எண்ணெய்யை சராசரியாக ஒரு நாளுக்கு 4.05 லட்சம் பேரல் இறக்குமதி செய்துள்ளது. இது ஜூன் 2023-க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும். ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலம் தினமும் 14 லட்சம் பேரல் அளவிலான கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதில் 4 லட்சம் பேரலை சீனா மட்டும் வாங்குகிறது.
Vortexa தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி 15 லட்சம் பேரலுக்கு மேல் சென்றது. 2025-ல் பெரும்பாலான மாதங்களில் இது 12 லட்சம் பேரலாக இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பில் சீனாவுக்கு பெரும்பகுதி சென்றது. ஏனெனில் அமெரிக்கா வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தியதால் வெனிசுலா எண்ணெய் கிடைப்பது குறைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி கடுமையாக குறைந்துள்ளது. டிசம்பரில் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி தினசரி 9.29 லட்சம் பேரலாக குறைந்தது. இது 2022 டிசம்பருக்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். 2024-ல் சராசரியாக 13.6 லட்சம் பேரலாகவும், 2025-ல் 12.7 லட்சம் பேரலாகவும் இருந்தது.
ரஷ்யாவில் இருந்து வாங்கும் கூடுதல் கச்சா எண்ணெய் மூலம் வெனிசூலாவில் இருந்து தடைபெற்ற சப்ளை ஈடுசெய்துள்ளது சீனா.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications