சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் உற்பத்தி ஆலை என்று அழைக்கப்படும் சீனாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனை என்பது மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினை கண்டு வருவது உலகமறிந்த விஷயம். இதனால் உலகின் பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும், தங்களது உற்பத்தியினை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனம் தொடங்கி, சாம்சங் என பல முன்னணி பிராண்டுகளும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!

மோசமான நிலை

மோசமான நிலை

எனினும் சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மோசமான நிலையில் உள்ளது எனலாம். பல்வேறு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சிக்கி வந்த சீனா, அதன் தாக்கத்தினை தொழிற்துறையிலும் உணரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையும் சரிவினைக் கண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனை

ஸ்மார்ட்போன் விற்பனை

கடந்த 2022ல் மட்டும் சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையானது 13% அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் இந்த துறையில் இந்த அளவுக்கு மோசமான சரிவினை கண்டுள்ளது தற்போது தான். ஆய்வு நிறுவனமான ஐடிசி அறிக்கையின் படி, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் நுகர்வோர் செலவு செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

2013-க்கு பிறகு மோசமான நிலை

2013-க்கு பிறகு மோசமான நிலை

கடந்த 2022ம் ஆண்டில் சீனாவில் இருந்து 286 மில்லியன் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் 329 மில்லியன் போனாக இருந்தது. இது கடந்த 2013ல் இருந்து பார்க்கும்போது குறைந்த விகிதமாகும். இது கடந்த தசாப்தத்தில் மிகப்பெரியதொரு வீழ்ச்சியினை காட்டுகின்றது.

2013ல் தான் முதல் முறையாக சீனாவின் வருடாந்திர விற்பனையானது 300 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் தற்போது உலகளாவிய மந்த நிலைக்கு மத்தியில், சீனாவினை கொரோனாவும் வாட்டி வதைத்து வருகின்றது.

விவோ & ஹானர்

விவோ & ஹானர்

ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம் 2022ம் ஆண்டில் 18.6% சந்தை பங்கினைக் கொண்ட, ஒரு முன்னணி விற்பனையாளராக உருவெடுத்துள்ளது. சந்தை பங்கினில் முக்கிய பங்கு வகிக்கும் டாப் செல்லிங் பிராண்டாக இருந்தாலும், ஏற்றுமதியில் 25.1% சரிவினைக் கண்டுள்ளது. மற்றொரு சீனா பிராண்டான ஹானர் (ஹூவாய்-க்கு கீழ்) இரண்டாவது சிறந்த விற்பனையாளராக உள்ளது. இதன் ஏற்றுமதியும் 34% அதிகமாக அதிகரித்துள்ளது.

ஆப்பிள் & ஓப்போ

ஆப்பிள் & ஓப்போ

ஆப்பிள் மற்றும் ஓப்போ நிறுவனங்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. ஆப்பிளின் மொத்த விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 4.4% சரிவினைக் கண்டுள்ளது. இது மற்ற சந்தைகளை காட்டிலும் நல்ல வளர்ச்சி தான் என்றாலும், மற்ற நாடுகளை காட்டிலும் சீனா ஆப்பிளின் முக்கிய சந்தையாக உள்ளது.

ஆப்பிளின் நிலைப்பாடு

ஆப்பிளின் நிலைப்பாடு

இதே 4வது காலாண்டில் டாப் செல்லிங் பிராண்டாக ஆப்பிள் உள்ளது. எனினும் அதிகம் விற்பனையாகும் பிராண்டாக இருந்தபோதிலும் பாக்ஸ்கான் ஆலையில் ஏற்பட்ட பிரசனைகளுக்கு மத்தியில் விற்பனை இன்னும் சரிவினைக் கண்டுள்ளது. இது சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் விற்பனையானது இன்னும் குறைந்துள்ளது.

மோசமான பொருளாதார மந்தம்

மோசமான பொருளாதார மந்தம்

சீனாவில் போடப்பட்ட பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியது. இது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் அதன் மோசமான செயல்திறனைக் கண்டது.

 

சர்வதேச சந்தையில் உலகளாவிய போக்குகள் நிலையற்ற ஒரு நிலையிலேயே காணப்படுகின்றது. உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையானது 1.2 பில்லியனாக குறைந்துள்ளது. இது 2013ல் பரந்த ஒரு போக்கினை குறைக்கிறது. உலக சந்தையில் ஆண்டு விற்பனையில் 11% சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Smartphone sales hit 10 year low with 13% decline in last year

China's Smartphone sales hit 10 year low with 13% decline in last year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X