உலகளவில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வங்கிகளின் வீழ்ச்சி, போர், கொரோனா பெரும்தொற்று, தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி ஆகியவற்றின் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்திருக்கிறது.
இந்த பெரும் பொருளாதார நெருக்கடியால் உலகளாவிய செல்வந்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்று 2023 ஹுருன் குளோபல் ரிச் ஹெல்த் கூறியுள்ளது.
கடந்த வருடத்தை விடவும் தற்போது உலக பணக்காரர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி தான் மிகவும் மோசமான ஒன்றாக உள்ளது.
8% சரிவு!
உலக அளவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையானது 8% ஆக குறைந்துள்ளது என்றும் அதிலும் அவர்களின் சொத்து மதிப்பு 10% வரை சரிந்துள்ளது என்றும் ஹூருன் குளோபல் ரிச் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஹுக்வெர்ப் கூறியுள்ளார்.
3,112 கோடீஸ்வரர்கள்
உலகில் தற்போது 3,112 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8% குறைவாகும். அதாவது கடந்த ஆண்டை விட தற்போது 269 பேர் குறைந்துள்ளனர்.
சீனா
Hurun Global Rich List 2023 அறிக்கையின் படி, சீனா 229 பில்லியனர்களை இழந்ததுள்ளது. மேலும் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன 445 பேரில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள், குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மொகல்ஸ் தரவரிசையில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா!
ஜன. 16, 2023 நிலவரப்படி சீனாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 969 ஆகவும், அமெரிக்கா 691 பில்லியனர்கள் உடன் 2வது இடத்தில் இருப்பதால், பெரும் பணக்காரர்களின் மிகப்பெரிய ஆதாரமாக சீனா உள்ளது காண முடிகிறது.
என்ன காரணம்
உலகளவில் பல பிரச்சனைகள் கொரோனா காலத்திற்கு பின்பு நிகழ்ந்தாலும் சீன அரசு அந்நாட்டின் டெக் நிறுவனங்கள் மீது எடுத்த ஒழுங்குமுறை நடவடிக்கையும், சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் சீனாவின் வர்த்தகம், வருமானம் என அனைத்தும் பாதித்துள்ளது.
இதனால் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.
ஆரம்பர உலகம்
ஆரம்பர பிராண்டுகள் பட்டியலில் LVMH தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்திலும் ஹெர்ம்ஸ் (HRMS.PA) வாரிசுகள் பெர்ட்ராண்ட் புயூச் மற்றும் அவரது குடும்பம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பின்னுக்குத் தள்ளப்பட்ட ஜாக் மா!
சீனாவின் தொழில்நுட்ப ஒடுக்குமுறைக்குப் பின் சீனாவின் பிரபல ஈ-காமர்ஸ் தளமான அலிபாபா குழுமத்தின் தலைவர் சென்ற ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் 34 ஆவது இடத்திலிருந்து 52 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பொருளாதார சரிவு!
கோவிட்-19 தொற்று, ரஷ்யா-உகரைன் போர், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, வங்கி வட்டி விகித உயர்வுகள், வங்கிகள் திவால் போன்றவற்றால் உலக அளவில் உள்ள பங்குச் சந்தைகளிலும் அதன் பாதிப்பை பார்க்க முடியும் என ஹூருன் குளோபல் ரிச் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஹுக்வெர்ப் கூறியுள்ளார்.
பெடரல் வங்கி
அதேசமயம் பெடரல் வங்கி ரெப்போ வட்டி வகித உயர்வுகள், உள்நாட்டு பொருளாதாரத்தின் வேகமின்மை போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான சீன யுவானின் மதிப்பும் 2022 இல் சுமார் 8% குறைந்துள்ளது எனவும் 1994 க்கு பிறகு இது நாட்டின் மிகப்பெரிய வீழ்ச்சி எனவும் ஹுக்வெர்ப் கூறியுள்ளார்.
எதுவும் சொல்வதற்கில்லை!
அமெரிகாவிற்கு அடுத்து சுவிட்சர்லாந்து வங்கிகளிடமிருந்தும் சீனாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது எனவும் உலகளாவிய நெருக்கடி ஏற்படுமா எனக் கேட்டால் உறுதியாக சொல்ல முடியாது எனவும் ரூபர்ட் ஹுக்வெர்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் பெருந்தொற்று குறையும்பட்சத்தில் நாட்டின் நிதி நிலைமை சீராக்க முடியும் எனவும் ரூபர்ட் ஹுக்வெர்ப் கூறுகிறார்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications