பெய்ஜிங், சீனா: சீனா அமெரிக்காவுடன் வர்த்தக மோதல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் உள்நாட்டிலும் சீனா அரசுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன.
பல்வேறு தொழிற்சாலைகளின் ஊழியர்கள் போராட்டம், தொழிற்சாலைகள் மூடப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகளை அந்நாட்டு அரசு எதிர்கொண்டிருக்கிறது. முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டங்களின் ஈடுபடுவது அதிகரித்து இருக்கிறதாம். ரேடியோ ஃப்ரீ ஆசியா என்ற நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.

சீனாவில் ஏற்கனவே அந்நாட்டு அரசு பணவாட்ட பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. அதாவது பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றின் விலை சரிவடைந்து இருக்கிறது . இதன் காரணமாக பணவாட்ட பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் தான் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்திருக்கிறது.
சீனாவின் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கான சந்தையாக அமெரிக்கா தான் இருக்கிறது. இந்த வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்பதால் சீனாவில் உற்பத்தியான பொருட்கள் அங்கேயே தேங்க கூடிய சூழல் உண்டாகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆலைகள் மூடப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் போராட்டம் நடத்துவது தொடர்கதையாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. ஹூனானில் செயல்பட்டு வரக்கூடிய சர்க்யூட் போர்டுகளை தயாரிக்கும் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை . இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% இறக்குமதி வரியை விதித்திருக்கிறார் டிரம்ப்., இதனால் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனா கிட்டத்தட்ட 16 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. இது சீன பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தொழில்கள் எல்லாம் கணிசமான பாதிப்பை சந்திக்க உள்ளன. ஏற்கனவே சீனாவில் ஆடை அணிகலன்கள் மற்றும் காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் எல்லாம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றன. அங்கே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு செல்லாமல் சீனாவிலேயே தேக்கமடைந்துள்ளன. ஆன்லைன் வாயிலாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்க நிறுவனங்கள் முயல்கின்றன. இருந்தாலும் அது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் பல்வேறு ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன .
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!



Click it and Unblock the Notifications