அமெரிக்காவால் பெருத்த அடி வாங்கி வரும் சீனா.. விமான பயணிகள் மூலம் கொரோனாவை பரப்பியதாக பகீர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனாவினை குற்றம் சொல்வதும், சீனா அமெரிக்காவினை குற்றம் சொல்வதும் ஒரு வாடிக்கையான ஒரு விஷயமே. ஆனால் வழக்கமாக இதுபோன்ற சண்டைகள் பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்து வரும்.

 

இதன் காரணமாக இரு நாட்டு பங்கு சந்தைகளும் சரியும். விளைவு இரு நாட்டு பொருளாதாரமும் வீழ்ச்சி காணும். இதன் விளைவாக உலக பொருளாதாரமும் வீழ்ச்சி காணும்.

அதோடு இந்த இரு நாடுகளில் வர்த்தகம் செய்யும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் பெரும் பின்னடவை சந்திக்கும். இப்படி இந்த இரு நாடுகளின் அங்காளி பங்காளி சண்டையினால், உலகமே பிரச்சனையை எதிர்கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமே.

சீனா தான் காரணம்

சீனா தான் காரணம்

ஆனால் இந்த முறை அது உச்சகட்டத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது எனலாம். ஏனெனில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சீனாவினை குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா. ஆனால் மறுபுறம் சீனாவே இதனை மறுத்து வருகிறது. ஆனால் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கு தன்னிடம் சரியான ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவினை பரப்பியது சீனா தான்?

கொரோனாவினை பரப்பியது சீனா தான்?

இப்படியாக இந்த இரு நாடுகளிடையே வளர்ந்து வரும் பிரச்சனைக்கு மத்தியில், அமெரிக்கா தொடர்ந்து தினசரி ஏதேனும் ஒரு அறிக்கையாவது சீனாவினைப் பற்றிக் கொடுக்காமல் இல்லை எனலாம். இப்படி கொரோனா என்னும் கொடிய அரக்கனை பரப்பியது சீனா தான் என்ற பிரச்சாரத்தினை தொடந்து முடக்கிவிட்டு வருகிறார் டிரம்ப்.

விமான பயணிகள் மூலம் கொரோனா பரவல்
 

விமான பயணிகள் மூலம் கொரோனா பரவல்

இந்த நிலையில் தற்போது ஒரு உயர் அதிகாரி ஒருவர், ஜெய்ஜிங் விமான பயணிகளை அனுப்பி கொரோனாவினைப் பரப்பியதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வுகான் மாகாணத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியது. கடந்த நவம்பர் மாதத்தில் தாக்கம் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது என்றும் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவரோ ஏபிசியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வைரஸ் பரவலை மறைத்துள்ளனர்

வைரஸ் பரவலை மறைத்துள்ளனர்

மேலும் உலக சுகாதார அமைப்பின் பின்னால் இருக்கும் சீனர்கள், இரண்டு மாதங்களாக இந்த வைரஸினை மறைத்து வைத்து, பின்னர் உலகெங்கிலும் விமானங்களில் நூறாயிரக்கணக்கான சீனார்களை உலகம் முழுக்க அனுப்பினர். இதற்கிடையில் தான் மிலனும் நியூயார்க்கும் தொற்று நோய்க்கான ஹாட் ஸ்பாட்களாக மாறின.

சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்

சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்

ஆனால் இதே நியூயார்க் பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள், நியூயார்க் பகுதியில் கொரோனாவின் தாக்கம், ஐரோப்பாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள், பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்ததால் தான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதாக கூறியுள்ளனர். எனினும் நவரோவும் டிரம்பை போலவே, சீனா நினைத்திருந்தால், அதனை வுகான் மாகாணத்துடனேயே வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அது தற்போது ஒரு தொற்று நோயாக மாறியுள்ளது. அதற்கு காரணம் சீனா தான் என குற்றம் சாட்டியுள்ளார்.

சந்தைகள் இன்று ஏற்றம்

சந்தைகள் இன்று ஏற்றம்

ஆக தினசரி சீனாவின் மீது அறிக்கை தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இன்றும் அதே போல நவரோ கூறியுள்ளார். ஆனால் இதில் உள்ள ஒரே நல்ல விஷயம் என்னவெனில், இவர்களின் இந்த வாக்குவதிற்கு இன்று எந்த சந்தையும் செவி சாய்க்கவில்லை எனலாம். குறிப்பாக நாஸ்டாக் 0.79% அதிகரித்தும், இதே எஃப்டிஎஸ்இ 2.08%-மும், சிஏசி 2.10%-மும், டாக்ஸ் 2.50%- மும் ஏற்றம் கண்டும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China sending air travellers to air travels to spread coronavirus

Us president Donald Trump administration stepped up its campaign of blaming China for the deadly coronavirus, with a top aide suggesting china sent airline passengers to spread the infection worldwide.
Story first published: Monday, May 18, 2020, 13:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X