உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு உற்பத்தியும் உள்நாட்டு வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.
ஆனால் கடந்த 3 வருடத்தில் சீன வர்த்தக சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் வேளையில் உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் கடுமையாக பாதித்துள்ள காரணத்தால் சீன பொருளாதாரம் முழுமையாக மீள முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தான் சீனாவின் வேலைவாய்ப்பு சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டு பல முக்கிய நகரங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளம் தலைமுறையினர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டின் பழைய ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

டிசம்பர் மாதமே சீனாவின் பொருளாதார நிலை மோசமடைய துவங்கிய நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங், சீனாவின் ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நேரம் வந்துவிட்டது. நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் கிராமங்களிலும், சிறிய டவுன் பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பல தசாப்தங்களுக்கு முன்பு சீனாவின் முன்னாள் அதிபரான Mao Zedong , சீனாவின் ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல லட்சம் இளைஞர்களை கிராமங்களுக்கு அழைத்து சென்றார். இது பெரிய அளவில் அக்காலக்கட்டத்தில் பலன் அளித்தாலும் தற்போதைய நிலையில் இது சாத்தியப்படுமா என்ற சந்தேகம் டிசம்பர் மாதம் முதல் சீன மக்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் சீனாவில் மிகவும் செழிப்பான, பணக்கார மாகாணமான Guangdong அரசு கடந்த வாரம் வேலையில்லாமல் இருக்கும் 300000 இளைஞர்களை அடுத்த 2- 3 வருடத்திற்கு கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை சீன மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Guangdong என்பது சீனாவின் உற்பத்தி பவர்ஹவுஸ், இந்த மாகாணத்திற்கே இந்த மோசமான நிலையெனில் மற்ற மாகாணங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. இதேபோல் கடந்த மாதம் Guangdong அரசு கல்லூரி மாணவர்கள், இளம் தொழில் முனைவோர்களை கிராமங்களில் வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ளவும், வர்த்தகத்தை உருவாக்கவும் உத்தரவிட்டது என CNN தெரிவித்துள்ளது.
Guangdong அரசு ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர்களை கிராமங்களுக்கு செல்ல ஊக்குவித்தாலும், உண்மையான நிலவரம் என்னவென்றால் சீன நகரங்களில் இருக்கும் 16- முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியிலான வேலைவாய்ப்பின்மை 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது Guangdong வரலாற்றில் 2வது மோசமான நிலவரம்.

வேலைவாய்ப்பின்மை 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது மூலம் சீனாவின் பெரு நகரங்களில் சுமார் 1.1 கோடி பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக பொருள். இந்த எண்ணிக்கைய வேகமாக குறைக்கத்தான் Guangdong போன்ற மாநில அரசுகள் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு இளைஞர்களை செல்ல உத்தரவிட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications