சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா.. மீண்டும் சரிவை சந்திக்கும் பங்கு சந்தைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாங்காய்: சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த நாட்டு பங்கு சந்தைகள் மீண்டும் சரிவினை நோக்கி சென்று கொண்டுள்ளன.

கொரோனாவினை முதன் முதலாக தோற்றிவித்த சீனாவில், தற்போது கொரோனாவின் தாக்கம் இல்லை, மாறாக சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.

மேலும் சீனாவில் முடங்கிபோன தொழில் சாலைகள், நிறுவனங்கள், பள்ளிகள் கல்லூரிகள் என தற்போது தான் வழக்கம் போல இயங்க தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இது சீனாவுக்கு மட்டும் அல்ல மற்ற நாடுகளுக்கும் சற்று நிம்மதியினை கொடுத்து வந்தது எனலாம்.

இரண்டாவது முறையாக பாதிப்பு

இரண்டாவது முறையாக பாதிப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா, மார்ச், ஏபரம் மாதம் வரையிலும் கூட சற்று அதன் தாக்கம் இருந்து வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக, எந்த கொரோனா வழக்குகளும் அங்கு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, மீண்டும் கொரோனாவின் தாக்கம் இரண்டாவது முறையாக பரவ தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

இதனையடுத்து சீனாவின் பங்கு சந்தைகள் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக சீனாவின் வுகான் மாகாணத்தில் லாக்டவுன் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்த புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று சீனாவின் ஷாங்காய் காம்போசைட் குறியீடு (Shanghai Composite index) 0.02% வீழ்ச்சி கண்டு 2,894.80 ஆக முடிவடைந்துள்ளது.

இந்த குறியீடுகள் எல்லாம் வீழ்ச்சி
 

இந்த குறியீடுகள் எல்லாம் வீழ்ச்சி

இதே மற்றொரு குறியீடான ப்ளூ சிப் சிஎஸ்ஐ 300 குறியீடு (blue-chip CSI300 index) 0.09 சதவீதம் வீழ்ச்சி கண்டும், இதே நிதி சம்பந்தமான குறியீடுகள் 0.06 சதவீதம் வீழ்ச்சி கண்டும், நுகர்வோர் ஸ்டேபிள்ஸ் துறையானது 0.79 சதவீதம் வீழ்ச்சி கண்டும் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே ரியல் எஸ்டேட் குறியீடு 0.01 சதவீதமும் வீழ்ச்சி கண்டும் முடிவடைந்துள்ளது.

இந்த துறையெல்லாம் வீழ்ச்சி

இந்த துறையெல்லாம் வீழ்ச்சி

ஹெல்த்கேர் சம்பந்தமான துணை குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீத வீழ்ச்சியுடனும், இதே ஸ்மாலர் ஷென்சென் குறியீடு 0.24 வீழ்ச்சியுடனும், ஸ்டார்டப் போர்டு சினெக்ஸ்ட் காம்போசிட் குறியீடு 1.055 சதவீத வீழ்ச்சியுடனும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவின் தோற்றுவிப்பு மையமான வுகான் மாகாணத்தில், இன்று 5 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதுவும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்கள் என்றும் இடி செய்தியில் கூறியுள்ளது.

பெரும் பொருளாதார இழப்பு

பெரும் பொருளாதார இழப்பு

இதே மே 10 அன்று சீனாவின் முக்கியமான பகுதிகளில் 17 புதிய வழக்குகளை பதிவு செய்த நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனாவால், அந்த நாட்டின் இடையே சற்று கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். முதன் முறையாக கொரோனா தாக்கத்தின் போது பெரும் பொருளாதார இழப்பினை சந்தித்த சீனா, இரண்டாவது முறை, இன்னும் அலர்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China share markets down as pandemic concerns resurface

China shares again start to fall as virus concerns resurface.
Story first published: Monday, May 11, 2020, 22:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X