இன்று உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது எனில் அதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் தான். சீனாவின் வுகானின் தோன்றிய இந்த வைரஸ் இன்று பல நாடுகளில் வேகமெடுத்து பரவி வருகிறது.
எனினும் முதன் முதலாக தோன்றிய சீனாவில் அதன் தாக்கம் தற்போது இல்லை என்றே கூறலாம்.
மேலும் தற்போது அங்கு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மீண்டு வர ஆரம்பித்துள்ளன. என்ன தான் அனைத்தும் தொடங்கப்பட்டாலும், விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பொருளாதாரம் தற்போதைக்கு இயல்பு நிலைக்கு வருவது கஷ்டமே என்று சில அறிக்கைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின.
நிதி திரட்ட வேண்டும்
இந்த நிலையில் சீனா பொருளாதாரம் மேம்பட, அதனை தூண்டுவதற்காக 700.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை சீனா திரட்ட வேண்டியிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிதி முதலீட்டை ஊக்குவிக்கவும், நுகர்வோர் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அவசியமானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 6.8 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தினை மீட்க நடவடிக்கை
ஏனெனில் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த நாட்டின் தொழில் துறை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் என அனைத்தும் முடங்கியிருந்தன. இந்த நிலையில் ஏற்கனவே சீன அரசு அதன் உள்கட்டமைப்பு செலவு திட்டங்களை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் கடன் வழங்குனர்களுக்கு அதிக பணம் கிடைக்கச் செய்துள்ளது. இருப்பினும் இன்னும் தூண்டுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
நுகர்வினை அதிகரிக்க நடவடிக்கை
முன்னோடியில்லாத வகையில் தாக்கங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் முன்னோடியில்லாத கொள்கைகள் தேவைப்படும். மேலும் நுகர்வினை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். மேலும் தேவையை அதிகரிக்க மக்கள் கையில் பணம் புரள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பத்திர விற்பனையின் மூலம் வருமானம்
உள்ளூர் அரசாங்க கடன் நிலைகளை அதிகரிக்கும் அபாயத்தினை குறைக்க, சிறப்பு பத்திர விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம், ஏற்கனவே அரசு நிர்ணயித்த நோக்கங்களை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு நிதியளிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்டர்கள் ரத்து
மேலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விரைவில் பொருளாதாரம் மீண்டு வந்து விடும் என்ற மாயையே சீனாவில் இருந்தது. ஆனால் தற்போது பல வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து மூலப் பொருட்கள் மற்றும் பாகங்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆக இதனால் சீனாவின் பொருளாதாரம் இன்னும் மேற்கொண்டு அழுத்தம் கண்டுள்ளது.
பிரச்சனை நீடிக்கலாம்
மேலும் இந்த பிரச்சனை இன்றோ நாளையோ முடியும் ஒன்று அல்ல. குறைந்த பட்சம் இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சந்தைகள் மற்றும் விநியோக சங்கிலிகளை உறுதிப்படுத்த போதுமான முயற்சிகள் தேவை. அதுவும் அது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம்.
ஊக்குவிப்பு நடவடிக்கை
கடந்த 2008ல் உலக நெருக்கடிக்கு பின்னர் பெய்ஜிங் செய்தததைப் போலவே ஒரு திட்டத்தினை, தற்போது தொடங்குவதை தவிர்த்தது. நவம்பர் 2008ல் சீன அரசு தேவை மற்றும் முதலீட்டினை அதிகரிக்க 4 டிரில்லியன் யுவானை அறிவித்தது. இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமைந்தது.
வலுவான ஊக்குவிப்பு நடவடிக்கை
ஆக வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி எனினும் மற்ற உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டால் மட்டுமே சீனாவின் பொருளாதாரம் முன்பு போல மீண்டு வரும் என்பதும் நிதர்சணமான உண்மை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications