சீனா – ஈரான் 25 வருட ஒத்துழைப்பு ஒப்பந்தம்.. பைடன் அரசுக்கு சவால்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிராகன் தேசமான சீனாவுக்கும், ஈரானுக்கும் இடையே 25 ஆண்டுக்குகான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

 

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். அதோடு ஈரானுடன் வர்த்தகம் செய்யும் மற்ற நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ஈரான், மிக மோசாமான நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது.

 அமெரிக்க –சீன வர்த்தக உறவு

அமெரிக்க –சீன வர்த்தக உறவு

அதன் பிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் இருந்து வந்தது. இதே சமயத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயும் வர்த்தக உறவுகள் அவ்வளவு சுமூகமாக இல்லை எனலாம். சீனா மீது அமெரிக்கா வரி விதிக்க, அமெரிக்காவுக்கு சீனா வரி விதிக்க என மிக மோசமான நிலையில் தான் வர்த்தக உறவும் இருந்து வந்தது.

சீனா – ஈரான் ஒப்பந்தம்

சீனா – ஈரான் ஒப்பந்தம்

தற்போது சீனாவும் ஈரானும் கூட்டாக 25 ஆண்டுகால ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளன. இதனால் இனி ஈரானின் முக்கிய வர்த்தக பங்காளியாக சீனா இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் குறிப்பாக இந்த இரு நாடுகளும் இணைந்துள்ள இந்த ஒப்பந்தத்தில் அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் என பெரிய நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.

சீன – ஈரான் உறவு மேம்படும்
 

சீன – ஈரான் உறவு மேம்படும்

குறிப்பாக இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா அரசு, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கலாம். ஈரான்-சீனா உறவுகளை இந்த ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தும். இது குறித்து வெளியான செய்தியில், 2016 ஜனவரி மாதம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது இந்த ஒப்பந்தம் முதலில் முன்மொழியப்பட்டது. இது போக்குவரத்து துறைமுகங்கள், எரிசக்தி, தொழில் மற்றும் சேவைகள் துறைகளில் பரஸ்பர முதலீடுகள் சம்பந்தமாக ஒப்பந்தம் இட ஒப்புக் கொள்ளப்பட்டது.

சீனாவுக்கு சிக்கல் அதிகரிக்கலாம்

சீனாவுக்கு சிக்கல் அதிகரிக்கலாம்

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமான உள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை மேலும் அமெரிக்கா சீனா இடையேயான உறவினை மோசமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈரான் சீனாவுக்கு ரகசியமாக எண்ணெய் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China signs 25 year deal with iran in challenge to Biden’s administration

China – iran updates.. China signs 25 year deal with iran in challenge to Biden’s administration
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X