சீனாவுக்கு சரியான செக் வைத்த அமெரிக்கா.. அதிகரிக்கும் மோதல் போக்கு.. கவலையில் உலக நாடுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் சிப் ஏற்றுமதி, சிப் விற்பனை செய்வதற்கான புதிய கட்டுபாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் சிறப்பு உரிமம் பெறாமல், சீனாவுக்கு மேம்பட்ட சிப்களை வழங்காது.

இதன் மூலம் சீனாவின் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்த அமெரிக்க முயல்வதாக, சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா-வை கட்டம் கட்டி அடிக்கும் அமெரிக்கா.. 13 நிறுவனங்களுக்குத் தடை..! சீனா-வை கட்டம் கட்டி அடிக்கும் அமெரிக்கா.. 13 நிறுவனங்களுக்குத் தடை..!

அமெரிக்காவின் துஷ்பிரயேகம்

அமெரிக்காவின் துஷ்பிரயேகம்

அமெரிக்காவின் இந்த முடிவின் மூலம் சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தக விதிகளை மீறுவதாக, சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா தனது தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தினை மேம்படுத்த, சீன நிறுவனங்களை ஒடுக்க நினைக்கிறது. இதன் மூலம் அமெரிக்கா தனது அதிகாரத்தினை துஷ்பிரயேகம் செய்கிறது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் வளர்ச்சியினை தடுக்க முடியாது?

சீனாவின் வளர்ச்சியினை தடுக்க முடியாது?


இது சீன நிறுவனங்களின் உரிமைகள் மற்றும் ஆர்வத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அமெரிக்க நிறுவனங்களின் நலனிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் ஆயுதமாக்கல் மற்றும் அரசியல்மயமாக்கல் நடவடிக்கைகளால், சீனாவின் முன்னேற்றத்தினை ஒரு போதும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

 சீனாவிற்கு பெரும் பாதிப்பு

சீனாவிற்கு பெரும் பாதிப்பு

நிங்கின் இந்த கருத்தானது அமெரிக்காவின் சிப் தடை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வந்துள்ளது.

நிங்கின் கருத்தினை போல அமெரிக்காவின் தடையால் சீனாவின் வளர்ச்சியினை முடக்க முடியாது என்று கூறினாலும், சிப்கள் தடையால் சூப்பர் கம்யூட்டிங் முதல் ஆயுத தயாரிப்பு வரையில் அனைத்து மின்னணு இயந்திரங்களுக்கும், தேவையான முக்கியமான சிப் தொழில் நுட்பத்தினை சீனா நாடுவதை முடக்கும் வகையிலான அமெரிக்காவின் நகர்வு இருக்கும். இது சீனாவின் ராணுவ நவீனமயமாக்கலை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் சீனாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இருதரப்பு உறவின் நிலை

இருதரப்பு உறவின் நிலை

அமெரிக்காவின் பாதுகாப்பினை காரணம் காட்டி தொடர்ந்து இதுபோன்ற தடை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கா சீனா உறவு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வருகின்றது.
எனினும் இதிலிருந்து சோர்ந்து போகாமல், சீனா பல பில்லியன் டாலர்களை தொடர்ந்து இத்துறையில் முதலீடுகளையும் செய்து வருகின்றது.

 பங்குகள் பலத்த சரிவு

பங்குகள் பலத்த சரிவு

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது மேற்கொண்டு சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவின் உற்பத்தி நிறுவனங்களில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையேயான பதற்றத்தின் மத்தியில், செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்கு விலையானது 40% வரையில் சரிவினைக் கண்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China slams US for export restrictions on chips

US imposes new restrictions on Chinese chip exports, chip sales Companies in the US will not supply advanced chips to China without obtaining a special license.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X