Recommended Video
சர்வதேச அளவில் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த பயம் தற்போது பொருளாதாரத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம். சொல்லப்போனால் 2015ல் இருந்ததை போல சீனாவின் சந்தை படு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் எனில், மறுபுறம் 3,257 பங்குள் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளனவாம். அதுவும் தினசரி இலக்கினையும் தாண்டி சரிய ஆரம்பித்துள்ளனவாம்.
சீனாவின் சந்தை வீழ்ச்சி
ஒரு புறம் இதில் முதலீட்டாளர்கள் படு நஷ்டம் கண்டுள்ளதோடு, பல முதலீட்டாளர்கள் இருப்பதாவது மிஞ்சுமே என்ற நிலையில், இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் எடுக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பங்கு சந்தைகள் மேலும் சரியத் தொடங்கியுள்ளன. மேலும் பங்கு சந்தையில் இருந்த அன்னிய முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவின் பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கானத் தொடங்கியுள்ளது.
CSI 300 இண்டெக்ஸ் சரிவு
சொல்லப்போனால் சீனாவில் சிஎஸ்ஐ இண்டெக்ஸ் குறியீடு ஒரே நாளில் 9.1% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வர்த்தக முடிவில் கிட்டதட்ட 8% வீழ்ச்சி கண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது கடந்த 2015ல் சீனா சந்தைகள் படு வீழ்ச்சி கண்ட நிலையில், அதன் பின் சற்று ஏற்றம் காண ஆரம்பித்தன. ஆனால் தற்போது சீனாவில் கொரோனாவின் கொடிய தாக்குதலால் CSI 300 இண்டெக்ஸ் அதன் 15 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீழ்ச்சி காணும் பங்குகள்
ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகியவற்றில் உள்ள 4,000 ஒற்றைப்படை பங்குகளில் 162 பங்குகளைத் தவிர, மற்ற அனைத்தும் இழப்புகளைப் பதிவு செய்துள்ளன. இதனால் உலகளாவிய முதலீட்டாளர்கள் நஷ்டத்தில் சிக்கியுள்ளதால் சீனாவின் 7.5 டிரில்லியன் டாலர் பங்கு சந்தைக்கு இழப்பு என்பது எப்போதும் மிருகதனமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சீனாவின் சிஎஸ்ஐ இண்டெக்ஸ் 9.1% ஆக வீழ்ச்சி கண்டு 15 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்குதலால் சுமார் 425 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும், சுமார் 20,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கொரோனாவின் தாக்கத்திற்கு இது வரை சரியான மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், கொடூர வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் பலர் பலியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நிறுவனங்கள் மூடல்
ஏற்கனவே அமெரிக்கா சீனா வர்த்தக போரால் சீரழிந்து போன சீனாவின் பொருளாதாரம், தற்போது மீண்டும் கொரோனா வைரஸால் சீரழிய ஆரம்பித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் சீனாவில் உள்ள பாக்ஸ்கான், ஸ்டார்பக்ஸ், மேக்டெனால்டு, வோல்க்ஸ்வேகன், டொயேட்டா இது தவிர இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சீன கிளைகளை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால் சீனாவின் தொழில் துறை வெகுவாக பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சுற்றுலா துறையும் பாதிப்பு
கொடிய கொரோனாவால் ஏற்கனவே சீனாவில் சுற்றுலா துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அதன் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல ஆயிரம் சிற்றுண்டிகள் மற்றும் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் பொருளாதாரம் பெரும் ஆட்டம் கண்டுள்ளது என்றே கூறலாம்.
பாதிப்பு அதிகரிக்கும்
இது குறித்து ஆக்ஸ்போர்ட் பொருளாதார நிபுணர்கள், சீனாவின் பொருளாதாரம் 2003ல் இருந்ததைப் போல வீழ்ச்சியடையலாம் என்றும் கணித்துள்ளனராம். ஏனெனில் இது சார்ஸ் வைரஸை விட கொடிய தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது என்றும், இதனால் சீனாவுக்கு இழப்பீடும் பெரியதாக இருக்கும் என்றும் கணித்துள்ளனராம்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications