சற்று முன்பு தான் ஒரு கட்டுரையில் படித்தோம். அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ, அமெரிக்கா சீனா வர்த்தக ஒப்பந்தம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
ஆனால் அதனை கலைத்து விடும்போல் இருக்கிறது சீனா. ஏனெனில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, அமெரிக்காவை மேற்கொண்டு சீண்டும் விதமாக, சீனா வாஷிங்டனை எச்சரித்துள்ளது.
சொல்லப்போனால் அமெரிக்காவை நெருப்புடன் விளையாட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது.
சீனா எச்சரிக்கை
வர்த்தக ஒப்பந்தம் முதல் தொடங்கி, இராணுவம், கொரோனா வைரஸ் பரவல் என எது எடுத்துதாலும் பிரச்சனையாகவே உருவெடுத்து வருகிறது. இப்போது தான் அப்பாடா பரவாயில்லையே. சீனா அமெரிக்கா பிரச்சனையானது முடிவுகு வந்து விடும் போல் இருக்கிறதே என்ற நிலையில், இந்த பகிரங்க எச்சரிக்கையானது வந்துள்ளது.
காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாலும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சீனா, இப்படி பொங்கி எழுந்ததிற்கு என்ன காரணம். அமெரிக்காவின் சுகாதார மற்றும் பொதுச் சேவை அமைச்சர் அலெக்ஸ் அசார் கடந்த ஆக்ஸ்ட் 9 அன்று, தைவானுக்கு சென்றது தான் பிரச்சனையா? அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தான் குற்றம் சாட்கிறது சீனா.
சீனா கடும் எதிர்ப்பு
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மூன்று கூட்டறிக்கையை இச்செயல் மீறியுள்ளதாக சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நோக்கத்திற்காக சில அமெரிக்கா அதிகாரிகள் சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தைவான் பிரச்சனையை வேண்டுமென்றே பயன்படுத்த நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
பிரச்சனை அதிகரிக்கும்
அமெரிக்கா தைவானுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், 41 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுக்கும் தைவானுக்குமான சந்திப்பு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பிரச்சனையை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனெனில் சீனாவால் வெறுக்கப்பட்ட முன்னாள் தைவான் ஜனாதிபதியின் வீட்டுக்கு விஜயம் செய்தார் அலெக்ஸ் அசார். மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
சரியான பதிலடி கொடுக்கப்படும்
இதற்கிடையில் சீனாவின் முக்கிய நலன்கள் சம்பந்தபட்ட பிரச்சனைகளில் அமெரிக்க அதிகாரிகள் தலையிடுகிறார்கள். அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பத்திரிக்கையாளார் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் 1949ம் ஆண்டு முதல் சுயராஜ்யம் செய்யப்படுள்ள தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் கூறியுள்ளார்.
தைவானை ஆதரிப்போம்
பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் சுகாதாரப் பிரச்சனைகளில் தைவானை எங்கள் நண்பராகவும், எங்கள் கூட்டாளியாகவும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என்று புதன் கிழமையன்று மாஸ்க் தொழில்சாலைக்கு விஷயம் செய்த அசார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சீனா தைவானுக்கும் எச்சரிக்கை
இந்த நிலையில் அசாரின் பயணம் ரத்து செய்யப்பட வேண்டும் என சீனா எச்சரித்தது. இதற்காக பெய்ஜிங் எல்லையில் போர் விமானங்களை அனுப்பியதாகவும் தைவான் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்படி பல தரப்பிலும் குற்றம் சாட்டப்படும் சீனா, அமெரிக்காவினை பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது, இந்த இரு பெரும் பொருளாதார நாடுகளின் பிரச்சனையால், உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ? தெரியவில்லை. இனி இதற்கு அமெரிக்கா தரப்பில் என்ன பதிலடி இருக்குமோ பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
இன்னும் சில தினங்களில் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசப்படவிருக்கும் நிலையில், இதன் எதிரொலியானது காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications