சீனா தனது 5 ஆண்டுத் திட்டத்தில் திபெத்-ல் மிகப்பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து பல்வேறு கட்டுமானங்களையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
Recommended Video
திபெத் நாட்டில் சுமார் 30 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து ஹீமாலைய பகுதியில் உள்கட்டமைப்பையும், புதிய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தைக் கட்டவும், இந்திய எல்லைப் பகுதியில் தற்போது இருக்கும் வழித்தடத்தை மேம்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் 14வது 5 ஆண்டுத் திட்டத்தில் சுமார் 190 பில்லியன் யுவான் அதாவது 29.3 பில்லியன் டாலர் அளவிலான தொகை 2021-25ஆம் ஆண்டுக்குள் முதலீடு செய்து பல்வேறு போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் 2025க்குள் தீபெத் நாட்டின் சாலை போக்குவரத்துத் தொலைவு 1,20,000 கிலோமீட்டரைத் தாண்டும் என்றும், எக்ஸ்பிரஸ்வே 1,300 கிலோமீட்டர் ஆகவும் உயரும் எனக் கூறப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் திபாத் நாட்டின் கிராமம் மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் சாலையின் தரத்தையும் மேம்படுத்தும் பணிகளை இந்த 5 ஆண்டுக் காலத்தில் செய்ய உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் சீனா திபெத் நாட்டில் புல்லட் ரயிலை வருகிற ஜூலை மாதத்திற்குள் இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப் பிரதேசத்தின் அருகில் வரை செல்லும் என்றும் சீன அதிகாரிகள் Xinhua பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications