ஐரோப்பிய நாடுகள் உடன் சீனா வர்த்தக போர்.. லிஸ்ட் போட்டு தூக்கும் ஜி ஜின்பிங்..!!

அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பல வருடங்களாக நடந்து வரும் வேளையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் சமீபத்தில் சீனா தயாரிப்புகளை டார்கெட் செய்து வரி விதித்த நிலையில், ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு ஐரோப்பாவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் பெரிய லிஸ்ட் போட்டு ஐரோப்பிய நாடுகளை அடிக்க சீனா தயாராகி வருகிறது. இதனால் புதிய வர்த்தக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உடன் சீனா வர்த்தக போர்.. லிஸ்ட் போட்டு தூக்கும் ஜி ஜின்பிங்..!!

ஐரோப்பிய யூனியன் சமீபத்தில் சீனாவின் எலக்ட்ரிக் கார்களின் இறக்குமதி மீது வரி விதிக்க முன்வந்த நிலையில், சீனா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகியுள்ளது. இது அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருதரப்பும் அதிகப்படியான தடைகளையும் வரிகளையும் விதித்தன. ஆனால், இந்த முறை சீனா குறிப்பிட்ட ஐரோப்பிய பொருட்களுக்கே டார்கெட் வைத்து தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சீனா கையாண்ட உத்தியைப் போன்றது.

சீன அரசாங்கமும், அரசு ஊடகங்களும் ஏற்கனவே எந்தெந்த ஐரோப்பியப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்பதை அறிவித்து வருகின்றன. இதன் அடிப்படையில் சீனா எந்தெந்த ஐரோப்பிய நாடுகளை டார்கெட் செய்ய உள்ளது என்பதைப் பார்ப்போம் வாங்க:

பிராந்தி: தனித்து நிற்கும் பிரான்ஸ்

சீனாவின் பதிலடி நடவடிக்கைகளில் முதலிடம் பிடிப்பது ஐரோப்பிய பிராந்தி. ஜனவரி மாதம் ஐரோப்பிய பிராந்தி மீது வந்த புகார் காரணமாக வரி விதித்தது. மேலும் ஐரோப்பிய பிராந்தி வர்த்தகம் குறித்து சீனா விசாரணை நடத்துவதாக அறிவித்தது, ஆனால் இந்த விசாரணை முடிய ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.

ஆனால், பிரான்ஸ் பிராந்தி மீது தற்காலிகமாக வரியை விதிக்கும் அபாயம் தற்போது உள்ளது.

பன்றி இறைச்சி: ஸ்பெயினுக்கு பாதிப்பு

இந்த வாரம் ஐரோப்பிய நாடுகள் பன்றி இறைச்சியை சீனாவுக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தப்படும் என சீனா அறிவித்தது. இதன் விளைவாக, ஸ்பெயின் போன்ற முன்னணி ஏற்றுமதி நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த ஆண்டு சீனா ஸ்பெயின் பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கு இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இருந்தது. டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் இந்த தடை மூலம் பாதிக்கப்படலாம்.

மதுபானம்: மத்தியதரையக கடல் பகுதி நாடுகளுக்கு அதிக பாதிப்பு

கடந்த மாதம், சீன அரசு ஊடகங்கள் மதுபானம், பால் பொருட்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தடை விதிக்கப்படலாம் என குறிப்பிட்டன. பிரான்ஸ் சீனாவிற்கு அதிக அளவில் மது ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடு. எனவே, இந்த தடை பிரான்சை அதிகம் பாதிக்கும். அதைத் தொடர்ந்து பிற மத்தியதரையக கடல் பகுதி நாடுகளும் பாதிக்கப்படும்.

கார்கள்: ஜெர்மனி அதிகம் பாதிப்பு

ஐரோப்பிய யூனியனில் உள்ள சீன வர்த்தக அமைப்பு, பெரிய இன்ஜின் கொண்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு சீனா தடை அல்லது அதிக வரி விதிக்கலாம் என கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தது. சீன அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்திப்படி, சில சீன கார் நிறுவனங்கள் பெரிய இன்ஜின் கொண்ட ஐரோப்பிய கார்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துமாறு சீன அரசைக் கோரியுள்ளன.

இந்த தடை ஐரோப்பிய நாடுகளை மட்டுமே இலக்கு வைத்ததாக இருந்தால், ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். ஆனால் இந்த தடை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தினால், அமெரிக்க மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

பால் பொருட்கள்: டென்மார்க்கிற்கு பாதிப்பு

சீன அரசு ஊடகங்கள் பால் பொருட்களும் இலக்கு வைக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளன. பால் பொருட்கள் இறக்குமதியை சீனா அதிகம் நம்பவில்லை என்பதால், இந்த தடையால் பெரிதாக பாதிப்பு ஏற்படாது. மேலும், பிற நாடுகளில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முடியும்.

விமானங்கள்: தடை விதிக்கப்படும் வாய்ப்பு குறைவு

சீன அரசு ஐரோப்பிய விமானங்களும் இலக்கு வைக்கப்படலாம் என கூறப்பட்டாலும், பெரிய பயணிகள் விமானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இரண்டு மட்டுமே உள்ளன என்பதால், இந்த தடை விதிக்கப்படும் வாய்ப்பு குறைவு.

ஏர்பஸ் (Airbus SE) என்ற பிரான்ஸ் நிறுவனத்தை சீனா இலக்கு வைத்தால், அமெரிக்காவின் போயிங் (Boeing Co) நிறுவனத்திடம் இருந்து மட்டுமே விமானங்களை வாங்க வேண்டியிருக்கும். அமெரிக்காவுடனான உறவு மோசமாக இகுக்கும் வேளையில் சீனா இதை விரும்பாது.

ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக உறவுகளை பாதிக்கும். சீனாவின் பதிலடி நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளை எந்த அளவு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+