பெய்ஜிங்: சீனாவின் மந்தமான பொருளாதார நிலை, உற்பத்தி அளவில் சரிவு, புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலை ஆகிய காரணங்களுக்காக 2014ஆம் ஆண்டுக்கான ஜிடிபி அளவுகளை 7.3 சதவீதமாகக் குறைத்ததுள்ளது சீனா.
உற்பத்தி பாதியாகக் குறைந்தது...
சீனாவின் உள்நாட்டு உற்பத்தி குறித்து தேசிய புள்ளிவிபரம் மையம் தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது. இதில் கடந்த வருடம் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 10 டிரில்லியனாக இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் முந்தைய கணிப்புகளை விடவும் குறைவாக 5 டிரில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.
இதனால் சீனா தற்போது 2014ஆம் ஆண்டுக்கான ஜிடிபி கணிப்புகளை 7.4 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாகக் குறைத்துள்ளது.
சேவை துறை..
சீனாவில் தற்போது தொழிற்துறை மற்றும் விவசாய உற்பத்திகள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், சேவைத்துறையின் உற்பத்தி அளவீடுகள் அதிகளவில் பாதித்துள்ளது.
இதன் காரணமாகச் சீனா, சேவைத்துறையை மையமாக வைத்து ஜிடிபி கணிப்புகளை 7.3 சதவீதமாகக் குறைத்துள்ளது.
சீன பங்குச்சந்தை
சந்தையின் முந்தைய கணிப்புகளான 7.4 சதவீதம் ஏற்கனவே 25 வருடத்தில் குறைவான அளவீடாக உள்ள நிலையில், இப்புதிய கணிப்புகள் சந்தை முதலீட்டாளர்களை அதிகளவில் பாதிக்கவில்லை. இதனால் ஷங்காய் காம்போசிட் குறியீடு 0.83% வரையில் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை
கடந்த ஒரு வார காலமாகச் சீன சந்தையின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வந்த இந்திய சந்தை இன்று நிலையான வர்த்தகத்தில் உள்ளது. வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 34.72 புள்ளிகள் சரிவில் 25,167 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் என்எஸ்சி குறியீடு 15.80 புள்ளிகள் சரிவில் 7,639.25 புள்ளிகளை எட்டியுள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications