பெய்ஜிங் : அமெரிக்காவும் சீனாவும் ஒரு புறம் நீயா? நானா? என போட்டி போட்டுக் கொண்டு இருந்த நிலையில், ஜப்பானில் நடந்த ஒஷாகா மாநாட்டிற்கு பின்பு எந்த வித சலனமும் இல்லாமல் இருந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ளது.
ஆமாங்க.. இப்படியே நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டால் எதையும் சாதிக்க முடியாது. நாம் இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் அவரவர் பிரச்சனைக்கு ஏற்றவாறு பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு முடிவு வரும்.
அதோடு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும், இந்த வர்த்தக பிரச்சனைகளை யோசித்து, அதற்கு ஏற்றாற்போல் தீர்வு காணப்பட வேண்டும். ஆக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது.
ஹூவாய் மீதான தடைகள் அகற்றப்படுமா?
இது குறித்து சீனா அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங், வாராந்திர மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை, அமெரிக்கா விரைவில் நீக்கிவிடும் என்றும் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் அமெரிக்கா சீனா உறவுகளுக்கு இடையேயான பாதுகாப்பான உறவு பாதைக்கும் இது மேலும் வழி வகுக்கும் என்றும் சீனா நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனா இனி பிரச்சனைகளை கொடுக்காது?
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த ஒரு வருட காலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. அதோடு இந்த பிரச்சனையின் நடுவில் மாறி மாறி ஒருவருக்கொருவர் கட்டணங்களை விதித்துக் கொண்டோம். ஆனால் சீனா இனி இது போன்ற அழுத்தங்களை அமெரிக்காவுக்கு தராது என்றும் உறுதி பூண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
வாருங்கள் பேச்சு வார்த்தையை தொடங்குவோம்?
இந்த இரு நாடுகளினுடைய வர்த்தக குழுக்கள் மற்றும் இரு நாடுகளின் தலைவர்களால் ஒசாக்காவில் எட்டப்பட்ட ஒரு மித்த கருத்துப்படி, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்குவோம் என்றும் காவ் கூறியுள்ளார்.
உரையாடலின் மூலம் பிரச்சனையை தீர்க்க வழி காணுவோம்?
இந்த சமமான உரையாடலின் மூலம் ஒருவருக்கொருவர் நியாயமான கவலைகள் கருத்தில் கொள்ளப்பட்டால், இரு தரப்பினரும் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி கண்டுபிடிக்க முடியும் என சீனா நம்புகிறது. அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியபடி, சீன பொருட்களுக்கு புதிய கட்டணங்களை இனி விதிக்க மாட்டோம், ஆனால் ஹூவாய் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துகிறோம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார் இதற்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
வாங்க டிரம்ப் சார் பேச்சு வார்த்தை தொடங்கலாம்?
ஜப்பானில் ஜி20 மாநாட்டில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை அடுத்து, மீண்டும் எப்போது பேச்சு வார்த்தையை தொடங்கலாம் என்று சீனா, போன் மூலமாக அமெரிக்கா அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும், விரைவில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்றும் அமெரிக்கா அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனினும் பேச்சு வார்த்தை நடக்குமா? அது எப்போது என்று தான் கேள்விக்குறியாகவே உள்ளதாம்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications