ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், ரேடார் அமைப்புகள் மற்றும் CT ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போரை கிளப்பியுள்ளது.
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவின் சமீபத்திய ஏற்றுமதி தடைக்கு முக்கிய காரணம், அமெரிக்க அரசு கம்ப்யூட்டர் சிப்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை தயாரிக்கும் டஜன் கணக்கான சீன நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

இதனால் சீனாவின் செமிகண்டக்டர் துறை முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதை செய்தது ஜோ பைடன் அரசு தான், ஏற்கனவே டிரம்ப் 35 சதவீத வரியை சீனா மீது விதிக்க அறிவித்துள்ள நிலையில், 20 சீன நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது பெரும் வர்த்தக போருக்கு வழிவகுத்துள்ளது.
சீனா அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மூன்று முக்கிய அரிதான தாதுக்களான கேலியம், ஜெர்மானியம் மற்றும் ஆண்டிமனி ஆகிய உலோக தாதுவின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இந்த உலோகம் அனைத்தும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. இந்த உலோகத்தை வைத்து கம்ப்யூட்டர், செக்யூரிட்டி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா எவ்வளவு செலவு நஷ்டம்?: USGS அமைப்பு சமீபத்தில் செய்த ஆய்வின் கேலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்படும் தடைகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மொத்த செலவு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
சீனா 2023 ஜூலை மாதத்தில் இரண்டு உலோகங்களின் ஏற்றுமதிக்கு தனிப்பட்ட உரிமம் தேவைப்படும் என நிபந்தனைகளை விதித்தது. சீன இயற்கை வளத்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு அமெரிக்காவிற்கு இரண்டையும் ஏற்றுமதி செய்யவில்லை. ஆண்டிமணி ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
சீனா, உலகளவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான முக்கிய தாதுக்களின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. உதாரணமாக, ஜப்பானும் அதன் கிட்டத்தட்ட அனைத்து கேலியம் தேவையை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது, ஆனால் அதை ஸ்கிராப் உலோகத்தை மறுசுழற்சி செய்வதன் மூலமும் சிறிய அளவில் உற்பத்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications