அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா மத்தியில் வர்த்தக போர் வெடிக்கும் என்பது தான் முக்கிய பேச்சாக இருக்கும் வேளையில், கடந்த வாரம் டிரம்ப் தனது டிவிட்டரில் சீனா இறக்குமதி பொருட்கள் மீது 35 சதவீதம் வரையில் வரியை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதிமாக ஜி ஜின்பிங் தலைமையிலான சீனா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனா, அமெரிக்காவுடன் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில்நுட்ப போட்டியில் அதிரடியாக, டிரம்ப் ஆட்டத்திற்கு அடிப்போடும் வகையில் சீன வர்த்தக அமைச்சகம், செவ்வாய்க்கிழமை, காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் முக்கியமான உலோகத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

இந்த உலோகம் அனைத்தும் செமிகண்டக்டர்கள், சோலார் பேனல்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமானவை. இதேவேளையில் சீனாவிடம் இந்த உலோகம் பெரிய அளவில் உள்ளது, கனிமவளத்தில் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி சீனா, அமெரிக்காவுக்கு வேட்டு வைத்துள்ளது.
அமெரிக்க அரசு ஏற்கநவே சீன நிறுவனங்களுக்கு சிப் உற்பத்தி தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியதற்கான பதிலடியாக கூறப்பட்டாலும், டிரம்ப்-ஐ எதிர்கொள்ள தயார் என்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா, தனது "என்டிட்டி லிஸ்டில்" கிட்டத்தட்ட 140 சீன நிறுவனங்களை சேர்த்துள்ளது. இந்த இணைப்பு மூலம் அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சீனா ஏற்கனவே அமெரிக்காவுக்கு இந்த மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு செய்ய வேண்டுமானியின் சீன நிறுவனங்கள் தனிப்பட்ட உரிமத்தை பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்த நிலையில், இதன் சப்ளையர்களை மொத்தமாக ஓழித்துவிட்டது. தற்போது மொத்தமாக ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
இதுவரையில் சீன கொடுத்த பதிலடி அனைத்தும் ஜோ பைடன் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், தடைகளுக்குமானது. டிரம்ப் ஜனவரி 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த பின்னர் சீனாவுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகள் புதிய வர்த்தக போரை உருவாக்கும் என தெரிகிறது. அடுத்த 4 வருடத்திற்கு சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போர் மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு சூப்பர் பவர் நாடுகளுக்கு இடையிலான தொடர்ந்து நடைபெற்று வரும் தொழில்நுட்ப போட்டியை டிரம்ப்-ன் புதிய வரி விதிப்பு தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படகிறது.


Click it and Unblock the Notifications