உலக நாடுகளை உளவு பார்க்கும் சீனா.. Tiktok வெறும் டிரைலர் தான், பெரிய லிஸ்டே இருக்கு..!!

டிக்டாக் (TikTok) செயலி மட்டுமல்லாமல், இணைய பயனர்களை உலகளவில் கண்காணிக்க சீனா பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளை பயன்படுத்தி வருவதாக ஆஸ்திரேலிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குரல் (Voice of America) என்ற செய்தி நிறுவனம் ஆஸ்திரேலிய ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை உளவு பார்க்கும் சீனா..  Tiktok வெறும் டிரைலர் தான், பெரிய லிஸ்டே இருக்கு..!!

ஆஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை நிறுவனம் (Australian Strategic Policy Institute) நடத்திய ஆய்வில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு நிறுவனம் ஆஸ்திரேலிய அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெற்று இயங்கி வருகிறது.

மே 2ஆம் தேதி வெளியிடப்பட்ட Australian Strategic Policy Institute அமைப்பின் அறிக்கையில், "சீன அரசின் பிரசாரப் பிரிவு, சமூக ஊடக செயலிகள் மற்றும் ஈகாமர்ஸ் தளங்கள் மற்றும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டு செயலிகளில் இருந்து உலக மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்காக சீன தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயலிகள் பட்டியலில் அந்நாட்டின் டாக்சி சேவை தளமான டிடி (DiDi), ஜென்ஷின் இம்பேக்ட் (Genshin Impact) எனும் ஆக்ஷன் கேம், பிரபலமான ஈகாமர்ஸ் தளமான Temu ஆகியவை இருக்கின்றன.

சீனா டிக்டாக் போன்ற செயலிகளை பயன்படுத்தி உலகளவிலான தகவல் சூழலை மறுவடிவமைப்பு செய்து வருகிறது. உலகளவில் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும், சீன அரசு செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும், சீனாவின் கலாச்சார, தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் வெளிநாடுகளில் தனது செல்வாக்கை விரிவாக்க சீனா இத்தகைய பிரபலமான செயலிகளை பயன்படுத்தி வருகிறது" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை குறித்து சீன அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பிரச்சனைகளில் ஆஸ்திரேலிய அரசு "சீனாவுக்கு எதிரான மனநிலையை" தூண்டுவதாக சீன அரசு முன்னதாக குற்றம் சாட்டியது மறக்க முடியாது. இன்றளவும் இரு நாடுகள் மத்தியில் வர்த்தக பிரச்சனைகள் உள்ளது.

ஆஸ்திரேலிய அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர் சமந்தா ஹோஃப்மேன் இந்த வாரம் ABC செய்தி சேனலில் பேசுகையில், செயலிகள், தளங்கள் மற்றும் விளையாட்டு ஆப்களில் இருந்து பெறப்பட்ட உலகளாவிய மக்களின் தரவுகள் சீனாவுக்கு மதிப்புமிக்கதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

டிக்டாக் தளத்தின் மூலம் உலகளவில் இருக்கும் மக்களின் தரவுகளை திரட்டி சீன அரசுக்கு பகிரப்பட்டு வருவதாக அமெரிக்காவில் நீண்ட காலமாக குற்றம்சாட்டப்பட்டு பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிக்டாக்-ஐ தடை செய்யவோ அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவோ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+