அமெரிக்க செய்யும் தவறுக்கும் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்.. எச்சரிக்கும் சீனா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி, தாய்வானுக்கு சென்றுள்ளார்.

 

கடந்த ஏப்ரல் மாதமே பெலோசி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது ரத்தானது. பெலோசி தாய்வான் செல்வார் என கூறியதற்கே சீனா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது பல எதிர்ப்பினையும் மீறி தாய்வானுக்கு சென்றுள்ளார்.

இதனால் பெலோசியின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில், பெலோசியின் இந்த நகர்வால் சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே போர் எழலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கோமியம் லிட்டர் 4 ரூபாய்.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் முக்கிய அறிவிப்பு..!

பதற்றம்

பதற்றம்

ஒரு புறம் சீனா எல்லையிலும் போர் வாகனங்களை நிறுத்தத் தொடங்கியுள்ளது. இதேபோல ஜப்பான் ராணுவ தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல அமெரிக்க போர் விமானங்களும் பெலோசியின் பாதுகாப்பிற்காக தைபே நகரம் நோக்கி நகர்ந்துள்ளன. இதனால் அமெரிக்கா சீனா, தாய்வான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

என்னவாகுமோ?

என்னவாகுமோ?

இதே மற்ற உலக நாடுகள் ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பெரும் பிரச்சனை நிலவி வருகின்றது. இந்த நிலையில் சீனா தாய்வானுக்கு பிரச்சனை இடையே போர் மூண்டால் என்னவாகுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

முக்கிய பேச்சு வார்த்தை
 

முக்கிய பேச்சு வார்த்தை

பல பதற்றமான நிலையையும் தாண்டி 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சென்று உயர் அதிகாரிகளில் ஒருவரான பெலோசி, முக்கிய பேச்சு வார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்சனை தான் என்ன?

பிரச்சனை தான் என்ன?

சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தாய்வான் தனி நாடாக உருவெடுத்தது. எனினும் தாய்வான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றே சீன தரப்பு கூறி வருகின்றது. மேலும் தேவைப்பட்டால் தைவானை கைபற்றவும் தயங்க மாட்டோம் என சீனா அடிக்கடி கூறி வருகின்றது. அடிக்கடி தைவான் வான் எல்லைக்குள் போர் விமானங்களையும் அனுப்பி எச்சரித்து வருவது குறிப்பிட்டதக்கது.

பதில் கொடுக்க வேண்டியிருக்கும்

பதில் கொடுக்க வேண்டியிருக்கும்

இப்படி இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் தான், அமெரிக்கா இதில் மூன்றாவது நாடாக நுழைந்துள்ளது. இதற்கிடையில் தான் அமெரிக்கா தன்னுடைய தவறுக்கு நிச்சயம் பதில் கொடுக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்துள்ளது.

பல்வேறு தடைகள்

பல்வேறு தடைகள்

ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்த காலத்தில், அமெரிக்கா சீனா இடையே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. வர்த்தகத்தில் பல தடைகளும் விதிக்கப்பட்டன. கொரோனாவையே சீனா தான் உருவாக்கியது என டிரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மாறி மாறி தடைகளை விதித்துக் கொண்டன.

 வர்த்தக உறவில் விரிசல் ஏற்படலாம்

வர்த்தக உறவில் விரிசல் ஏற்படலாம்

அதன் பிறகு அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்ட பின்னர், தற்போது தான் மீண்டும் சுமூக உறவு ஏற்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் சீனாவின் எச்சரிக்கையால் மீண்டும் அமெரிக்கா - சீனாவின் வர்த்தக உறவிலும் இது விரிசலை ஏற்படுத்தலாம்.

சர்வதேச அளவில் பிரச்சனை வரலாம்

சர்வதேச அளவில் பிரச்சனை வரலாம்

ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது உலகளவில் நெருக்கடியான நிலை நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China warns that it will have to pay the price for America's mistakes

China warns that it will have to pay the price for America's mistakes/அமெரிக்க செய்யும் தவறுக்கும் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்.. எச்சரிக்கும் சீனா..!
Story first published: Wednesday, August 3, 2022, 11:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X