சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கான பரிசோதனைக்கு முன் வந்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூபே மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமக்கு நோயின் அறிகுறிகள் இருப்பதாக முன்கூட்டியே தெரிவித்து, பரிசோதனையின் பின்னர் குறித்த நோய் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு சன்மானமாக 1,000 யுவான் வரை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தின் தலை நகரமான வுஹானிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் கியாஞ்சியாங் நகரத்தில் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் ஹூபே மாகாணத்தில் 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புள்ளாகியுள்ளதாகவும், 2,600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், அதோடு சர்வதேச அளவில் சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே 2,800 பேருக்கும் மேல் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படி ஒரு நிலையில் தான் இந்த தொற்று நோய் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் கியாஞ்சியாங் பணிக்குழு, மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்து, அது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு 10,000 யுவான் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டும் அல்ல இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உடனடியாக நிராகரிக்கப்படாதவர்களுக்கு 1,000 யுவான் என்றும், அதே சமயம் சந்தேகத்திற்கிடமான என பரிசோதனையில் தெரியாதவர்களுக்கு 2,000 யுவானும் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சன்மானது ஹூபேயில் மட்டும் அல்ல, சீனாவின் மற்ற இடங்களிலும் கொடுக்கப்பட்டு வருவதாகவும், என்ன குறைந்த அளவிலான சன்மானம் வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதே போல ஜியாங்கி மற்றும் ஹெபீ மாகணங்களிலும் சுமார் 300 - 500 யுவான்களை வழங்க உள்ளதாக சீனா ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கையானது மக்கள் முன்கூட்டியே தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் நிலைகொண்டுள்ள இந்த கொரோனாவை விரட்ட அந்த நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நிச்சயம் இது போன்ற அறிவிப்புகள் முன்கூட்டியே வருவதை தடுக்கவும், கொரோனா பாதிப்பினையும் ஆரம்பத்திலேயே அறியவும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் சீனா நம்புகிறது.


Click it and Unblock the Notifications