பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. ரயில் திட்டத்துக்கான நிதியுதவி ரத்து.. இந்தியாவுடனான நெருக்கம் காரணமா?

ஐந்து ஆண்டுகளாக விரிசலில் இருந்த இந்தியா சீனா உறவு தற்போது மீண்டும் உயிர் பெற தொடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு மேற்கொண்ட பயணம் இருநாட்டு உறவையும் மிக முக்கியமான ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை மற்றும் வர்த்தக மோதல்கள் காரணமாக இந்தியாவும் சீனாவும் மீண்டும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டத்திற்கு அளித்து வந்த நிதியுதவியை திடீரென சீனா நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. ரயில் திட்டத்துக்கான நிதியுதவி ரத்து.. இந்தியாவுடனான நெருக்கம் காரணமா?

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்தின் ஒரு பகுதியாக சீன அரசு பாகிஸ்தானின் ரயில்வே திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதாக இதற்கு முன்னர் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் திடீரென சீனா அந்த திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது . பாகிஸ்தானின் உள்கட்டமைப்புக்கு பெரிய வளர்ச்சி தருவதாக கருதப்பட்ட ரயில் திட்டத்திலிருந்து சீனா வெளியேறி இருப்பது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கராச்சி முதல் பெஷாவர் வரையிலான ரயில் கட்டமைப்பை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். பலுசிஸ்தான் பகுதியில் கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் காப்பர் மற்றும் தங்க சுரங்கத்தை அமைக்க இருக்கிறது. இதற்காக போக்குவரத்துக்காகவே இந்த ரயில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சீனா கைவிரித்துவிட்டதால் தற்போது இந்த ரயில் கட்டுமான பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கிய இடம் 2 பில்லியன் டாலர்கள் கடன் வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது பாகிஸ்தான். சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்தில் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை சீனா பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள், மின் நிலையங்களை கட்டி தந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சீனா இந்த திட்டத்தில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவியை சீனா திடீரென கைவிட்டு இருப்பது இந்தியா சீனா இடையிலான உறவு மேம்பட்டதன் ஒரு தாக்கம் தான் என சொல்லப்படுகிறது. இது ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவுடன் எதிர்ப்பு நிலையிலிருந்து சீனா பாகிஸ்தானுக்கு நெருக்கம் காட்டியது பாகிஸ்தானுக்கு பல நிதி உதவிகளை தந்து வந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் உடனான நெருக்கத்தை குறைத்து இந்தியாவோடு கைகோர்க்க தொடங்கி இருக்கிறது.

தற்போது சீனா இந்த திட்டத்தை மேற்கொள்வது அவர்களுக்கு தேவையற்ற நிதி சுமையை ஏற்படுத்தும் என சீன அரசாங்கம் கருதுகிறதாம். அதுமட்டுமின்றி ஏற்கனவே பல லட்சம் கோடிகளை பாகிஸ்தானில் முதலீடு செய்திருக்கிறது அதுவே எப்பொழுது தங்களுக்கு திரும்ப வரும் என்பது தெரியாது என்ற சூழலில் மேற்கொண்டு அங்கே பணத்தை செலவழிப்பதற்கு தயாராக இல்லை என கூறப்படுகிறது .

பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருங்கி வருவதும் சீனாவின் இந்த திடீர் முடிவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஒரு நட்பு தேவை என்பதற்காக மற்றொரு நட்பை நாங்கள் தியாகம் செய்துவிட மாட்டோம் என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+