சீனாவின் யுவான் கரன்சியானது அமெரிக்க டாலருக்கு மாற்றாக ரஷ்யாவில் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முதல் முறையாக யுவான் கரன்சியானது மாதாந்திர வர்த்தக அளவில் டாலரை மிஞ்சியது. இது கடந்த மார்ச் மாதமும் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது ரஷ்யாவின் யுவான் மிக முக்கிய கரன்சியாக மாறியுள்ளது.
டாலருக்கு எதிராக களமிறங்கியுள்ள யுவான்
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு முன்னதாக யுவானின் பரிவர்த்தனை என்பது குறைவாக இருந்தது. இப்பிரச்சனைக்கு பிறகு டாலரின் வரத்தானது குறைந்துள்ள நிலையில்,டாலருக்கு எதிராக யுவான் சந்தையில் களமிறங்கியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய வங்கிகளும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. உக்ரைனுக்கு உதவி செய்யும் விதமாகவும், இப்பிரச்சனையை நிறுத்தவும் மேற்கத்திய நாடுகள் முடிவெடுத்தன. இந்த நிலையில் தான் ரஷ்யா மீது பல தடைகளை விதித்தன. இந்த தடையால் ரஷ்யா முடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ரஷ்யாவுக்கு பாதிப்பு
ரஷ்யா சர்வதேச நாடுகளுடன் செய்யும் பண பரிவர்த்தனையை முடக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளன. இதனால ரஷ்யாவில் பெரியளவிலான முதலீடுகள் என்பது சரிவினைக் கண்டுள்ளன. புதிய திட்டங்கள் என்பது குறைந்துள்ளது. சப்ளை செயினில் தாக்கம் இருந்து வருகின்றது. குறிப்பாக ரஷ்யாவின் எனர்ஜி துறையை குறி வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, ரஷ்யா தடுமாற்றம் கண்டுள்ளது.
தள்ளுபடி விலையில் எண்ணெய்
எனினும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகின்றது. ஆக ரஷ்யாவினை முடக்க நினைத்த மேற்கத்திய நாடுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனினும் டாலரின் முடக்கத்தால் மேற்கத்திய நாடுகள் ரூபாய், யுவான் உள்ளிட்ட கரன்சிகள் வாயிலாக பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் தான் டாலருக்கு மாற்றாக ரூபாய் உருவெடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கு வெளியே யுவான்
யுவான் ரஷ்யாவில் தற்போது முக்கிய பங்கு வகித்தாலும், ரஷ்யாவினை தாண்டி பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனலாம். ஏனெனில் சீனாவுடன் பெரும்பாலான நாடுகள் அரசியல் பதற்றத்தில் காணப்படும் நிலையில், இது பெரும் தடையாகவே இருந்து வருகின்றது. ஆக ரஷ்யாவில் முக்கிய கரன்சியாக உருவெடுத்திருந்தாலும், சர்வதேச அளவில் அப்படி இல்லை என்பதே உண்மை. உலகளாவிய அளவில் அன்னிய செலவாணி ஒதுக்கீட்டில் சுமார் 2.7% ஆக மட்டுமே உள்ளது. இதே முதல் காலாண்டில் 2.9% ஆக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications