சீன பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டித் தவிக்கும் வேளையில் எப்படியாவது போராடி மீண்டு வர வேண்டுமென துடிக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்க் வெளிப்படையாகவே நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்றும் 2023இல் மிகப் பெரிய சவால்களை நாடு சந்தித்தது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மந்தமான பொருளாதாரத்தால் சீனாவின் சில நிறுவனங்கள் கடினமான சவால்களை சந்தித்தன. வேலை கிடைப்பதும் நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதும் குதிரைக் கொம்பாக இருக்கிறது என்றும் ஜீ ஜின்பிங்க் கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, அந்நாடு சந்தித்து வரும் பொருளாதார பிரச்னைகள் குறித்து வெளிப்படையாத ஜி ஜின்பிங் பேசியுள்ளார். பொதுவாக சீனாவின் பொருளாதாரம், நிதி நிலை குறித்து தகவலில் உண்மை தன்மை எப்போதும் குறைவாகவே இருக்கும் வேளையில் ஜி ஜின்பிங் புத்தாண்டு தினத்தில் பேசிய எப்போது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஜி ஜின்பிங் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளை புத்துயிர் ஊட்டவும், தேக்கமடைந்துள்ள உள்நாட்டு சுற்றுலாத் துறையை சீர்படுத்தவும் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் சீன பொருளாதாரம் 3 சதவீதம் வரையில் உயர்ந்தது, இது கடந்த 50 வருடத்தில் மோசமான வளர்ச்சி அளவீடாகும்.
இதன் பின்னர் 2023ல் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளால் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டு அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்தது. இந்த நிலையில் தீவிரமான பல நடவடிக்கைகள் மூலம் சீன நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சீன அரசு முயற்சிக்கிறது. ஆனால் அந்த நடவடிக்கைகள் போதாது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீன உற்பத்தியாளர்களின் கருத்துக்கணிப்பின்படி, தொடர்ந்து மூன்றாவது மாதமாக தொழிற்சாலை செயல்பாடுகள் குறைந்து வருகிறது. நோமுரா நிறுவன பொருளாதார நிபுணர்கள் சீனாவின் அடிப்படையான வளர்ச்சி விகிதம் இன்னும் சில ஆண்டுகள் மந்தமாகவே இருக்கும் என்று கூறுகின்றனர்.
சமீபத்தில் சீன அரசு பல ஊக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பொருளாதாரத்தின் அடிமட்டத்தை உயர்த்துவது கடினமாகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 2024 மார்ச் மாதம் மற்றொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் சீன ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி, அரசியல் சூழ்நிலைகள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்றும் நோமுரா பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவில் நிகழ்ந்த மிகப் பெரிய ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சியினால் அதன் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கில் பொது மக்களுக்கு கடன் வழங்கியபோதும் அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ரியல் எஸ்டேட் துறையை மீட்டெடுப்பதில் சீன அரசு மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் சீன அரசின் கடன் உதவிகளால் அதன் மாகாண அரசுகளும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடப்பதாகவும் அதை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்க் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications