ஈரானின் ரகசிய ஆயுதம்..! வெளிச்சத்துக்கு வந்த உண்மை..! அமெரிக்காவை கதற விட இது தான் காரணமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு ஈரான் தாக்குதல் நடத்தும் அதன் பின்னர் சரணடைந்து விடும் என அமெரிக்கா எண்ணியது. ஆனால் அமெரிக்காவே ஆச்சரியப்படும் அளவுக்கு தொடர்ந்து ஈரான் அமெரிக்காவுக்கு டஃப் கொடுத்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை நீடிக்கும் ஈரான் போரில், ஈரான் அமெரிக்காவின் தளங்கள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள முக்கியமான உட்கட்டமைப்புகள் மீது துல்லியமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு சீனா வழங்கும் மறைமுக உதவியே காரண என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் இது தொடர்பாக விரிவான ஆய்வினை நடத்தியுள்ளது.

ஈரானின் ரகசிய ஆயுதம்..! வெளிச்சத்துக்கு வந்த உண்மை..! அமெரிக்காவை கதற விட இது தான் காரணமா?

அதில் சீனா , அமெரிக்காவின் தளங்கள் குறித்த செயற்கைக்கோள் படங்களை ஈரானுக்கு வழங்குவதாக கூறுகிறது.அமெரிக்க தளங்கள் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை கண்டறிய ஈரானுக்கு இந்த படங்கள் பெரிதும் உதவுகிறது என்கிறது.

கடந்த சில மாதங்களாக ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மிகவும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்கா ஈரானின் ராணுவ திறன்கள் அழிக்கப்பட்டதாக கூறினாலும், தொடர்ந்து முழு பலத்துடன் அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு காரணமே சீனாவின் உதவிதான் என அந்த செய்தி கூறுகிறது.

Also Read

ஜூன் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து ராணுவ உபகரணங்கள் ஈரானுக்கு சென்றுள்ளன. அதில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜிபிஎஸ், விமான என்ஜின் பாகங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்ததாம். மேலும் அமெரிக்கா ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்த போது கப்பல்களில் சீனாவில் இருந்து ஈரானுக்கு ட்ரோன் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. கப்பல் போக்குவ்ரத்து விவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வினை நடத்தியுள்ளது அந்த நிறுவனம்.

ஈரானின் ஏவுகணைகளுக்கு தேவையான மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் எரிபொருளுக்கான அம்மோனியம் பெர்குளோரேட் போன்றவற்றை சீனா தான் சப்ளை செய்கிறடு என கூறுகிறது. ஒரு புறம் சீனா போரை நிறுத்த வேண்டும் என கூறுகிறது, ஈரான் அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்கிறது ஆனால் மறைமுகமாக ஈரானுக்கு ராணுவ உதவியையும் செய்து இரட்டை வேடம் போடுவதாக அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Recommended For You

சீன அதிபர் ஸீ ஜின் பிங் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. எனவே ஜின் பிங் உடனான பேச்சுவார்த்தையின் போது டிரம்ப் ஈரான் விவகாரத்தையும் முன்னெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளரான பீட் ஹெக்செத் சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை ஈரானுக்கு சில வழிகளில் உதவுகின்றன என ஏற்கனவே நாடாளுமன்றத்திலேயெ கூறி இருந்தார்.

சீனா, ரஷ்யா, வட கொரியா என அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மறைமுகமாக ஈரானுக்கு இந்த போரில் உதவுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த முறை சீன அதிபரின் அமெரிக்க பயணத்தின் போது இந்த குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+