பெய்ஜிங், சீனா: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிகபட்ச வரியை விதித்திருக்கும் நிலையில் சீனாவை சேர்ந்த ஏஜென்டுகள் இந்த இறக்குமதி வரியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு முன்னணி பிராண்டுகளுக்கான பொருட்களும் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவிடம் இருந்து இவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் பிராண்டின் பெயரை போட்டு கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% இறக்குமதி வரியை விதித்திருக்கிறார் டிரம்ப்.

இதன் காரணமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு இனி அதிக தொகையை செலவிட வேண்டி இருக்கும். இந்த சூழலில் சீனாவை சேர்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவின் முன்னணி பிராண்டுகளின் பொருட்களை தாங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பல மடங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் வருகின்றனர்.
தற்போது சீனாவை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் எப்படி இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து சீன பொருட்களை இறக்குமதி செய்வது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் நாங்கள் கூறக்கூடிய இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்றினால் பாதுகாப்பான அதே நேரத்தில் சட்டரீதியாகவும் நீங்கள் சீனா பொருட்களை வரி ஏதும் இல்லாமல் இறக்குமதி செய்ய முடியும், இதன் மூலம் உங்களுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்கும் என கூறுகின்றனர்.
சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யக்கூடிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதனை பர்சனல் ஷாப்பிங் என்ற பிரிவில் குறிப்பிட்டு தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக இவற்றை வாங்குவதாக குறிப்பிட்டால் அதிகபட்ச இறக்குமதி வரியை செலுத்த வேண்டிய தேவை இருக்காது என யோசனை கூறுகின்றனர்.
145% இறக்குமதி வரியில் இருந்து எப்படி தப்பிப்பது , எப்படி அதிக லாபம் காண்பது என சீனாவை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்களின் ஏஜெண்டுகள் வீடியோக்களை வெளியிடுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் பெரிய பெரிய பிராண்டுகளிடம் சென்று வாங்குவதற்கு பதிலாக அவர்களுக்காக அவற்றை தயாரித்து வழங்கும் எங்களிடமே நேரடியாக வாங்கினால் 10 மடங்கு குறைந்த விலையில் உங்களுக்கு பொருட்கள் கிடைக்கும் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து விளம்பரங்களை செய்து வருகின்றனர். சீனாவை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் இது போல ஆயிரக்கணக்கான வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications