சீனாவின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.. வங்கிகள் $350 பில்லியன் இழப்பினை காணலாம்.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம் இன்று ஆட்டம் கண்டு வருகின்றது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனா, சமீபத்திய ஆண்டுகளாகவே அடுக்கடுக்கான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது.

ஒரு புறம் கொரோனா எனில், மறுபுறம் கொரோனாவினை விட மோசமான எவர்கிராண்டேவின் திவால் நிலை. இது சீனாவின் அஸ்திவாரத்தினையே ஒட்டுமொத்தமாக ஆட்டம் கான வைத்துள்ளது எனலாம்.

சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா? சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா?

கடனை கட்ட முடியாது?

கடனை கட்ட முடியாது?

சீனாவின் முக்கிய வணிகமாக இருந்து வந்த ரியல் எஸ்டேட் வணிகம் பெரியளவில் முடங்கியுள்ளது. கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. பல பில்டர்கள் மற்றும் வாடிக்கையாளார்கள் என பலரும் வீட்டுக் கடனை கட்ட முடியாது என போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இது சீனாவின் தற்போது தொடர் கதையாகி விட்டது எனலாம்.

பெரும் இழப்பு வரலாம்

பெரும் இழப்பு வரலாம்

இதனால் மற்றொரு பூதாகரமான பிரச்சனை சீனாவுக்கு காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் பில்டர்கள் வாடிக்கையாளர்கள் என பல தரப்பினரும், வங்கிகளுக்கு கடனை திரும்ப திரும்ப செலுத்தவில்லை, இதன் காரணமாக சீன வங்கிகள் 350 பில்லியன் டாலர் இழப்பினை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்திவாரமே ஆட்டம்

அஸ்திவாரமே ஆட்டம்

ஏற்கனவே சீனாவின் ரியல் எஸ்டேட் சொத்துகள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது. இந்த நிலையில் 90க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் கடனை கட்டாமல் புறக்கணித்துள்ளனர். இது இனி இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

எவ்வளவு தாக்கம் இருக்கலாம்?

எவ்வளவு தாக்கம் இருக்கலாம்?

இது நாட்டின் 56 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வங்கி அமைப்பில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து எஸ் & பி தனது ஆய்வு கணிப்பில் 2.5 டிரில்லியன் யுவான் (356 பில்லியன் டாலர்) அல்லது 6.4% அடமான கடன்கள் ஆபத்தில் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இதே டாய்ச் வங்கியானது 7% வீட்டுக் கடன்கள் சிக்கலில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிரச்சனை இன்னும் அதிகரிக்கலாம்

பிரச்சனை இன்னும் அதிகரிக்கலாம்

இது வரையில் வங்கிகள் 2.1 பில்லியன் யுவான் மதிப்பிலான் கடனை வாடிக்கையாளர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளன. மொத்தத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும், மக்களுக்கும் இடையில் வங்கிகள் வசமாக மாட்டிக் கொண்டுள்ளன. நிலுவையில் உள்ள பில்டிங்குகளை கட்டி முடிக்க, பில்டர்களுக்கு நிதியுதவி கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காவிடில் பிரச்சனை இன்னும் பெரிதாகலாம் என ஹாங்காங் வணிக பள்ளியின் நிதி பேராசிரியர் கூறியுள்ளார்.

பல சவால்கள்

பல சவால்கள்

ஏற்கனவே மெதுவான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், கொரோனா தாக்கம் காரணமாகவும், வரலாறு காணாத வேலையின்மை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையால் பல தலைவலிகலை சீனா எதிர்கொண்டு வருகின்றது. ஆக சீனா நிதி நிலைமை மற்றும் சமுதாயத்தினை நிலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ன செய்யணும்?

என்ன செய்யணும்?

டெவலப்பர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும், கிரேஸ் பீரியர்டு ஒன்றை வழங்க வேண்டும். அப்படி இல்லாவிடில் நிச்சயம் சீன வங்கிகள் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் மற்ற நாடுகளை கட்டிலும் சீன வங்கிகளில் ரியல் எஸ்டேட் துறையில் அதிக கடன்களை வழங்குகின்றன.

சீனாவை பதம் பார்க்கலாம்

சீனாவை பதம் பார்க்கலாம்

சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியின் தரவின் படி, மார்ச் மாத இறுதியில் 39 டிரில்லியன் யுவான் அடமான கடன் நிலுவையில் இருந்துள்ளது. மற்றொரு 13 டிரில்லியன் யுவான் கடனாகவும் இருந்துள்ளது. மொத்ததில் சீன வங்கிகளின் நிலைமை மிக மோசமானதாகவே உள்ளது. இது சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தினையும் பதம் பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese banks could face around $350 billion in losses amid real estate crisis

Chinese banks could face around $350 billion in losses amid real estate crisis/சீனாவின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.. வங்கிகள் $350 பில்லியன் இழப்பினை காணலாம்.. ஏன் தெரியுமா?
Story first published: Monday, August 1, 2022, 17:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X