சீனா அரசு டெக் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் மீது எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக அந்நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம் செப்ட்ம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாபத்தில் சுமார் 81 சதவீத சரிவை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சீன அரசின் அபராதம் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது காலாண்டு முடிவுகள் அலிபாபா முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அலிபாபா நிறுவனம்
அலிபாபா நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 28.77 பில்லியன் யுவான் அளவிலான லாபத்தை பெற்ற நிலையில், இந்த ஆண்டு 81 சதவீத சரிவில் வெறும் 5.37 பில்லியன் யுவான் மட்டுமே பெற்று உள்ளது. ஒரு வருடத்தில் 81 சதவீதம் சரிவு என்பது மிகப்பெரிய பாதிப்பாகும்.
சீன அரசின் நடவடிக்கை
இதேபோல் இந்த சரிவுக்கு அலிபாபா, சீன அரசின் நடவடிக்கை தான் காரணம் என வெளியிடவில்லை, இதற்கு மாறாக முக்கியமான பிரிவில் அதிகப்படியான முதலீடுகளை செய்த காரணத்தால் லாப அளவீடுகள் குறைந்துள்ளது என விளக்கம் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக பொருளாதார அளவீல் கீழ் மட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களையும், சர்வதேச வாடிக்கையாளர்களையும் ஈர்க்க அதிக முதலீட்டை செய்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
வருவாய் அளவீடு
ஆனால் இக்காலக்கட்டத்தில் அலிபாபா நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு அதிகரித்திருந்தாலும், கணிக்கப்பட்ட அளவை அடையவில்லை. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அலிபாபா-வின் வருமானத்தின் அளவு சுமார் 29 சதவீதம் அதிகரித்து 200.7 பில்லியன் யுவான் ஆக உள்ளது.
சிங்கிள் டே வர்த்தக
அலிபாபா-வின் சிங்கிள் டே வர்த்தகத்தில் இந்த வருடம் அதிகப்படியான வர்த்தகத்தை பதிவு செய்திருந்தாலும், கடந்த 10 வருடத்தில் குறைவான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, ஒன்று அலிபாபா இந்த வருடம் எப்போது போல் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யவில்லை, மற்றொகு காரணம் சீனா ரீடைல் சந்தை ஏற்கனவே அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications