பெய்ஜிங்: சீனாவின் வணிகம் குறித்தான நம்பிக்கையானது ஜனவரி 2013-க்கு பிறகு மிக குறைந்த நிலைக்கு சென்றுள்ளது.
உலக பொருளாதாரம் குறித்த ஆய்வில், சீனாவில் கொரோனா லாக்டவுனில் சற்றே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இது மேற்கோண்டு சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் நம்பிக்கை சரிவு
நவம்பரில் 51.8 ஆக இருந்த குறியீடானது, டிசம்பரில் 48.1 ஆக சரிவினைக் கண்டுள்ளது. டிசம்பர் 1 - 16 வரை நடத்தப்பட்ட 2300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின், விற்பனை மேலாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நுகர்வோர் நம்பிக்கையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த 2013ல் கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து குறியீடானது மிக குறைவாக உள்ளது.
பொருளாதாரம் சரியலாம்
இந்த ஆய்வில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம். லாக்டவுன் காரணமாக வணிகம் சரிவினைக் காணலாம் என உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. எனினும் மீண்டும் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இறப்பு விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இது சீனாவின் வளர்ச்சியில் மெதுவாக வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு வணிகத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரெசசன் வரலாம்
இந்த நிலை தொடர்ந்தால் 2023ம் ஆண்டில் ரெசசன் வரலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சியானது 3% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் மோசமான செயல்திறனை சீனா கொண்டுள்ளது.
உற்பத்தி & சேவைத் துறை நுகர்வோர் குறியீடு
டிசம்பரில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் நுகர்வோர் குறியீடானது 50-க்கும் கீழாக கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. கொரோனாவால் தற்போது எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் நிறுவனங்களின் க்ளைம் விகிதம் 1% அளவுக்கு உயர்ந்துள்ளது.
சேவையில் தாக்கம் இருக்கலாம்
சீனா தற்போது பற்பல துறைகளில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம். பல சிறு தொழில்களிலும் பணப்பற்றாக்குறை அதிகரிக்கலாம். உணவகங்கள், ஜிம்கள், ஹோட்டல்கள் மற்றும் மற்ற பல சேவைகளும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. இதுவும் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
பிரச்சனைகள் வெடிப்பு
சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல இடங்களில் போராட்டங்கள் பிரச்சனைகள் வெடித்துள்ளன. இது மீண்டும் ஒரு மிகப்பெரிய கொரோனா அலையை எதிர்கொள்ளலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏனெனில் கொரோனாவினால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து சீனாவில் மயானங்களில் இறந்தவர்களின் உடல் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச பொருளாதாரம்?
ஒரு புறம் சீனாவின் வீழ்ச்சி என்பது வீழ்ச்சி என்பது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருந்தாலும், ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவினைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கலாம். இது சப்ளை சங்கிலியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு உலக நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications