உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு சூடுபிடித்து வரும் நிலையில் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனத்திற்குத் தற்போது 4 பக்கமும் போட்டி வருவது மட்டும் அல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் ஆதிக்கத்தைச் சீனா எலக்ட்ரிக் கார் நிறுவனம் உடைத்து விற்பனையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
இதனால் டெஸ்லாவின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் தலைமை விகிக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்காவில் போர்டு, ரிவியன் ஆகிய நிறுவனங்களும், ஐரோப்பாவில் வோக்ஸ்வேகன் நிறுவனமும், தென் ஆசிய சந்தையில் கியா, ஹூண்டாய் ஆகியவற்றும் போட்டியாக இருக்கும் நிலையிலும் முதன்மையாக இருக்கிறது.
சீனாவின் BYD
ஆனால் சீனாவின் BYD முதல் முறையாக டெஸ்லா-வின் ஆதிக்கத்தை உடைத்து விற்பனையில் முதன்மையாக விளங்குகிறது. இந்தத் திடீர் மாற்றத்திற்குச் சீனா அரசு டெஸ்லா கார்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு தான் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வாரன் பபெட்
அமெரிக்கப் பில்லியனரான வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் சீன ஆட்டோமொபைல் நிறுவனமான BYD வேகமாக வளர்ந்து வரும் சீன எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் மட்டும் அல்லாமல் உலகளவிலான விற்பனையில் டெஸ்லா-வை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
டெஸ்லா ஆதிக்கம்
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் டெஸ்லா உற்பத்தியை அதிகரிக்கத் தொழிற்சாலையைச் சீனாவில் அமைத்த நாளில் இருந்து முதல் இடத்திலேயே இருக்கும் நிலையில் முதல் முறையாக டெஸ்லா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
BYD 6,41,000 கார்கள்
சீனாவின் ஷென்சென் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் BYD 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 6,41,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைக் காட்டிலும் 300 சதவீதம் அதிகமாகும்.
டெஸ்லா விற்பனை
இதே காலகட்டத்தில் டெஸ்லா நிறுவனம் உலகளவில் சுமார் 5,64,000 கார்களை விற்பனை செய்துள்ளது, சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் விற்பனையும் சரிந்துள்ளது.
BYD வெற்றிக்கான காரணம்
BYD மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே ரினியூவபிள் எனர்ஜி, உற்பத்தி, விலை, விநியோகம், உதிரிப்பாகங்கள் உற்பத்தி, உதிரிப்பாகங்கள் கொள்முதல் வழித்தடம் ஆகிய அனைத்தையும் மேம்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகச் சீன மக்கள் மத்தியில் BYD மீதான நம்பிக்கை அதிகரித்து விற்பனையும் அதிகரித்துள்ளது.
டெஸ்லாவுக்கு நெருக்கடி
இதேவேளையில் டெஸ்லா நிறுவனத்தின் சீன அரசு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் வெளியான அறிவிப்பு சீன மக்கள் மத்தியில் டெஸ்லா மீதான சந்தேகத்தை அதிகரித்தும், மதிப்பைக் குறைத்தும் உள்ளது.


Click it and Unblock the Notifications