உலகளவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னோடியாக எலான் மஸ்க்-ன் டெஸ்லா இருந்து வந்த நிலையில், சத்தமில்லாமல் சீன நிறுவனத்தின் தந்திரத்தால் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது BYD.
இந்த நிறுவனத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம், ஆனால் இந்தியாவிலும் இந்நிறுவனம் தனது கார்களின் விற்பனையைத் துவங்கி பல வருடங்களானது.

சர்வதேச எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லா முன்னோடியாக இருந்த நிலையில், இந்த இடத்தைத் தற்போது சீனாவின் BYD பறிக்க உள்ளது, டிசம்பர் காலாண்டு முடிவுக்குள் இது நடக்கும் எனக் கணிக்கப்படும் வேளையில் ஆட்டோமொபைல் துறையில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது உலக நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் டோயோட்டா, வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை முன்னோடியாக இருந்தாலும், சீனாவின் BYD மற்றும் SAIC கடந்த சில வருடத்தில் பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 10 வருட ஆட்டோமொபைல் சந்தையில் அமெரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி நாடுகளை ஓரம்கட்டி வந்த சீனா கடைசியாக ஜப்பான் நாட்டின் ஆதிக்கத்தை உடைக்க வருகிறது. இதற்கு உதாரணமாக இந்த வருடம் அக்டோபர் வரையிலான காலத்தில் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட 36 லட்சம் காரிகளில் சுமார் 13 லட்சம் கார்கள் கிட்டத்தட்ட 35 சதவீத கார்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் கார்களுக்குத் தேவையான பேட்டரி தயாரிப்பில் சீனா தற்போது முன்னோடியாக இருக்கும் வேளையில் மிகவும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி பேக்குகளைத் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வரும் வேளையில் இதில் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பலன் பெறும் காரணத்தால் BYD மற்றும் SAIC எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதில் குறிப்பாக BYD நிறுவனம் ஏற்கனவே சீன எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லா-வை ஓரம்கட்டியிருக்கும் வேளையில், தற்போது சர்வதேச அளவிலும் சீனாவின் BYD முதலிடத்தை எட்ட உள்ளது.
இதன் மூலம் தற்போது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் நிறுவனத்தின் மதிப்பு, அதன் வரலாற்றைப் பார்க்காமல் யார் திறம்பட மற்றும் அதிகப்படியான சேவைகளைக் கொண்ட கார்களைத் தயாரிக்கிறார்களோ அவர்கள் பின்னால் மக்கள் செல்ல துவங்கியுள்ளனர்.
சீனாவில் தற்போது BYD மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் அதிநவீன எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்து அசத்தியது மட்டும் அல்லாமல் அதிகப்படியான புக்கிங் பெற்றுள்ளது. இதேபோல் சியோமி நிறுவனமும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே டெஸ்லா ஆதிக்கம் இனி வேகமாகக் குறைய உள்ளது.


Click it and Unblock the Notifications