வழக்கமாக நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஊழியர்களுக்கு பகிர்வது வாடிக்கை. பண்டிகை காலங்களில் போனஸ் வழங்குவது, நிறுவனத்தின் ஐந்து ஆண்டு கொண்டாட்டம், பத்தாண்டு கொண்டாட்டம் என தனியாக கொண்டாட்டங்களை நடத்தி அதில் ஊழியர்களை தேர்ந்தெடுத்து கார் போன்ற பரிசுகளை வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு நிறுவனம் செய்த செயல் ஊழியர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.
சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் எங்கும் தற்போது வைரலாகி இருக்கிறது. சீனாவில் செயல்பட்டு வருகிறது Henan Kuangshan Crane Co என்ற நிறுவனம். கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கிரேன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் விருந்து அளித்து உபசரிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருந்து நிகழ்ச்சியில் நிறுவனத்தின் முதலாளி Cui Peijun ஊழியர்கள் அனைவரையும் திக்கு முக்காட வைத்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய சுமார் 7000 ஊழியர்கள் பங்கேற்றனர். நிறுவனத்தின் தலைவர் கியூ பை ஜூன் கலந்து கொண்டு ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது நிறுவனம் கடந்தாண்டை விட இந்த ஆண்டு பெருமளவு லாபம் ஈட்டி இருக்கிறது என அப்போது அவர் குறிப்பிட்டார். நிறுவனத்தின் லாபத்தில் 70 சதவீதத்தை ஊழியர்களாகிய உங்களுக்கு தான் பிரித்து தரப் போகிறேன் என அப்போது அவர் அறிவித்தார்.

விருந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு டேபிள் போட்டு அந்த டேபிள் முழுவதும் சீன நாட்டு கரன்சியை கொட்டி வைத்திருந்தார்கள். உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு அள்ளிக் கொள்ளுங்கள் நீங்கள் எவ்வளவு பணத்தை எடுக்கிறீர்களோ அத்தனையும் உங்களுக்கே சொந்தம் என அறிவித்தார். இதனை அடுத்து ஏராளமான ஊழியர்களும் போட்டி போட்டுக்கொண்டு டேபிளில் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனர். கைகளில் அள்ளிய பணம் முழுவதும் அவர்களுக்கே வழங்கப்பட்டதாம். மொத்தம் 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இப்படி போனஸாக வழங்கியுள்ளார்.
நிறைய பேர் தூக்க முடியாமல் கையில் பணத்தை தூக்கி செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த முறையில் பரிசு வழங்குவதில் புகழ்பெற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்கு நெக்லஸ், மோதிரம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி வருகிறது. இந்த முறை வித்தியாசமாக பணத்தை வழங்கி இருக்கிறது. பணமாக கொடுத்தால் வங்கி கடன்களை அடைப்பது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க உதவுவது என அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்வார்கள் என இந்நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications