2005-09 காலகட்டத்தில் சீனாவில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் 'பூம்'-ஐ பார்த்து ஏமாந்த உலகளாவிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான்கள் எல்லாம் ஆளாளுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்து கோடி கோடியாக பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் கொட்டி முதலீடு செய்தனர்.
சீனாவும் மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி யுவான்களை வாரிவாரி இறைத்தது. ஆனால் வாங்கிய கடனுக்கான தவணைகளை 2 ஆண்டுகள் கூட செலுத்த முடியாத மக்கள் சொந்த வீட்டு ஆசையை துடைத்து எறிந்து விட்டனர். கடன் வாங்கிய யாருமே திரும்பச் செலுத்தவில்லை.

இந்த நிலையில் பல ஆயிரம் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் யாரும் குடியேற வரவில்லை. இதனால் அங்கு புல்லும் புதரும் மண்டி கிடக்கின்றது. வீடுகளுக்குள் சிலந்தி வலைகளும் வௌவ்வால்களும் மட்டுமே இருக்கிறது. ஆள் அரவம் சுத்தமாக இல்லாத பேய் வீடுகளாக அவை மாறிவிட்டன. இப்படிப்பட்ட ஒரு நிலையை மலேசியாவிலும் சீனா உருவாக்கிவிட்டது.
மலேசியாவின் தென்பகுதியில் ஒரு சொர்க்க புரியை ஏற்படுத்த போவதாகவும் அங்கு இல்லாத வசதிகளே இருக்காது என்ற அளவுக்கு அதை அமைக்கப்போவதாகவும் கூறி ஃபாரஸ்ட் சிட்டி திட்டம் (Forest City) என்ற மெகா புராஜக்ட் பயங்கர தடபுடல் ஏற்பாடுகளுடன் தொடங்கப்பட்டது.
வாட்டர் தீம் பார்க்குகள், கோல்ப் மைதானங்கள் போன்ற ஆடம்பரமான அம்சங்களும் ஃபாரஸ்ட் சிட்டியில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இது எதுவுமே கட்டப்படாமல் இப்போது பாரஸ்ட் சிட்டி ஒரு சூனியமான நகரமாக நின்று கொண்டிருக்கிறது. அறிவித்த வாக்குறுதிகளில் ஒரு சிறிய பங்கைக்கூட அங்கு நிறைவேற்றவில்லை.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பரான Country Garden, 100 பில்லியன் டாலர் செலவில் பாரஸ்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது.
ஆனால் இதுவரை வெறும் 4.3 பில்லியன் டாலர்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. இதனால் அதன் எதிர்காலம் புரியாத புதிராக விளங்குகிறது.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறிய கன்ட்ரி கார்டன் நிறுவனத்துக்கு 200 பில்லியன் கடன் ஏற்பட்டதால் செலவுக்கு பணம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை 81 சதவீதம் குறைந்துவிட்டதால் கன்ட்ரி கார்டனின் நிலை படுமோசமாக உள்ளது. படுமோசமான நிலையைப் பற்றி அறிந்து கொண்ட மலேசிய அரசு பாரஸ்ட் சிட்டி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்தது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியை சிறப்பு பைனான்சியல் மண்டலமாக அறிவித்து பார்வையாளர்களை வரவேற்பதற்காக கவர்ச்சிகரமான வருமான வரி சலுகைகள், மல்டிபிள்-என்ட்ரி விசாக்களையும் அறிவித்தது.
பாரஸ்ட் சிட்டி திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று கன்ட்ரி கார்டன் தொடர்ந்து கூறிவந்தாலும் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பாரஸ்ட் சிட்டி திட்டத்தின் படுதோல்வி சீனாவின் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கு ஒரு முன்னெச்சரிக்கையை உணர்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒருகாலத்தில் தென் மலேசிய பகுதியில் பிரகாசமாக இருந்த ரியல் எஸ்டேட் தொழிலிலும் இப்போது மண் விழுந்து விட்டது.
பெரிய அளவிலான கடனுதவியால் சீனாவில் ரியல் எஸ்டேட் லாபகரமாக நடந்த பிசினஸ் இப்போது எழுந்திருக்கவே முடியாமல் படுத்துவிட்டது. இதனால் சீனாவில் மட்டும் 65 மில்லியன் வீடுகள் காலியாக இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் 53 சீன டெவலப்பர்கள் திவாலாகிப் போன நிலையில் அங்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் கடினமான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பாரஸ்ட் சிட்டி திட்டத்தின் படுதோல்வி சீனாவின் ரியல் எஸ்டேட் மார்க்கெட் ஒரு முன்னெச்சரிக்கையை உணர்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒருகாலத்தில் தென் மலேசிய பகுதியில் பிரகாசமாக இருந்த ரியல் எஸ்டேட் தொழிலிலும் இப்போது மண் விழுந்து விட்டது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications