சமூக வலைத்தளங்களில் 1.5 கோடி ஃபாலோவர்களை கொண்டிருக்கும் ஒரு சீனதம்பதி தாங்கள் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக திடீரென அறிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தற்போது influencersகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இவர்கள் தங்களுடைய ஃபாலோவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், தாங்கள் வெளியிடும் வீடியோக்களுக்கான பார்வைகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக புதிது புதிதாக சிந்தித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு தம்பதி திடீரென தாங்கள் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த சன் சாய் ஹாங் என்பவரும் அவரது கணவரும் இணைந்து @caihongfufu என்ற பெயரில் ஒரு சமூக வலைதள பக்கத்தை வைத்திருக்கின்றனர். சீனாவில் புகழ்பெற்ற தம்பதி இவர்கள். இவர்களை 15 மில்லியன் பேர் சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறார்கள். லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் வீடியோக்களை நேரலையாக பதிவிடுவதில் இவர்கள் புகழ் பெற்றவர்கள். தொடர்ந்து ஐந்தாண்டு காலமாக லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களை தக்க வைத்துள்ளனர்.
ஆனால் திடீரென இவர்கள் தாங்கள் சோர்வடைந்து விட்டதாக கூறி சமூக வலைத்தளங்களை விட்டு தள்ளி இருப்பதாக அறிவித்துள்ளனர். சன் என்பவரும் அவரது கணவரும் இணைந்து தினமும் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை பதிவு செய்வார்கள். இவர்களின் வீடியோக்களுக்கு பார்வைகள் லட்சக்கணக்கில் வரும். ஆனால் இவ்வாறு தன்னுடைய ஃபாலோவர்களை அதிகரிப்பதற்கும், வீடியோக்களுக்கான பார்வைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய வேண்டி இருப்பதாக சன் தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட வேண்டும் என்பதற்காக நாங்கள் நிறைய நேரத்தை செலவிடுகிறோம் இது எங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என தெரிவி த்துள்ளார். என்னுடைய குடும்பத்தினரை கவனித்துக் கொள்வதற்கு எனக்கு நேரமே கிடைப்பதில்லை என்னுடைய குரல் மோசமடைந்துவிட்டது அதற்கு போய் சிகிச்சை எடுப்பதற்கு கூட எனக்கு நேரமில்லை ஏனெனில் தினமும் நான் வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய வேண்டும் வெளியிட வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார் .
கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கு நான்கு குழந்தைகள் பிறந்திருக்கின்றன நான் கருவுற்றிருந்த காலத்திலும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வீடியோ பதிவு செய்வதையும் தொடர்ந்து வந்தேன் என கூறியுள்ள சன் இது என்னுடைய உடல் நிலையை வெகுவாக பாதிக்க செய்துவிட்டது எனக் கூறியிருக்கிறார். இந்த தம்பதிகள் 5 ஆண்டுகளில் 1000க்கும் அதிகமான நேரலை வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
தற்பொழுது 35 வயதாகி இருக்கும் சன் இனி நாங்கள் நேரலையில் எந்த ஒரு வீடியோக்களையும் வெளியிடப் போவதில்லை , இதில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தினருடன் இணைந்து வாழ்க்கையை வாழ வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்தித்து எப்படி ஓய்வு பெறுவது வாழ்க்கை எப்படி அனுபவிப்பது என்பது குறித்து தான் இனி நான் கவனம் செலுத்த போகிறேன் என சன் கூறியுள்ளார்.

இந்த தம்பதிகள் ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை செய்து வந்தனர். 2020 ஆம் ஆண்டு இருவரும் காதல் வயப்பட்டு தங்களுடைய காதல் கதையை சமூக ஊடகத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ 3 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று தந்தது. இதனை அடுத்து சமூக ஊடகத்தில் தொடர்ந்து தங்களுடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் பதிவு செய்து வந்தனர். பின்னர் தங்களுக்கு இருக்கும் ஃபாலவர்களை பயன்படுத்திக்கொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பரங்களும் செய்ய தொடங்கினர்.
இதனை அடுத்து தாங்களாகவே பொருட்களை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினர். லைவ் ஸ்டீரீமிங் முறையில் இவர்கள் தினமும் வீடியோ வெளியிட்டு பிஸ்னஸை வளர்த்தனர். 2022 ஆம் ஆண்டில் இவர்கள் ஒரே நாளில் 266 கோடி ரூபாய்க்கு தங்கள் சமூகவலைதள பக்கம் மூலம் வணிகம் செய்ததாக வீடியோ வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். அந்த ஆண்டில் மட்டும் இவர்கள் நாள்தோறும் 4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தெரிவித்தனர். சமூக வலைத்தளத்தில் மக்களின் கவனம் பெற்று அதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டியவர்களாக மாறினர்.
இந்த வருமானம் அவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது. காப்பீட்டு நிறுவனத்தில் வேலைக்கு சென்ற போது 8 சதுர மீட்டர் கொண்ட ஒரு அறையில் வாடகைக்கு தங்கி இருந்த இவர்கள் பின்னர் சொந்தமாக ஆடம்பர வீடு கட்டியுள்ளனர். தங்களுடைய பெற்றோர்களுக்கும் சொந்த கிராமத்தில் ஆடம்பரமாக வீட்டைக் கட்டி வழங்கியுள்ளனர். நிதி ரீதியாக இவர்கள் நன்றாக வளர்ந்துவிட்டனர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் சன் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளை பெற்று இருக்கிறார். ஆனால் இந்த சமூக ஊடகத்தில் வீடியோ வேண்டும் என்பதற்காக தங்கள் குழந்தைகளுடனான முக்கியமான தருணங்களை தாங்கள் இழந்துவிட்டதாக தற்போது அவர் வருத்தம் தெரிவிக்கிறார். நாங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
எங்களிடம் ஒரு கணிசமான அளவு வருமானம் இருக்கிறது எனவே இனிமேல் நாங்கள் எங்கள் குழந்தைகள் மீதும் குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்த போகிறோம் தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்த வீடியோக்களை வெளியிடுவதையும் எப்படி சமநிலையோடு அணுகுவது என்ற என்பதை கற்றுக் கொண்ட பிறகு தங்கள் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு வருவோம் என சன் கூறியுள்ளார்.
சன் வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு பலரும் உங்களிடம் ஏற்கனவே நிறைய பணம் வந்துவிட்டது இனி உங்கள் மீது உங்கள் குடும்பத்தின் மீது செலுத்துங்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது இனியாவது உங்களின் உடல்நலனை பாருங்கள் என சிலர் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ பகிர்வு வாய்ப்பு தரும் தளங்கள் பலருக்கும் வருமான ஆதாரமாக மாறிவிட்டன. தங்களுக்கு பிடித்த அல்லது நிபுணத்துவம் பெற்ற விஷயங்களை பகிர்ந்து அதன் மூலம் ஃபாலோவர்களை பெறுகின்றனர்.
கணிசமான எண்ணிக்கையில் ஃபாலோவர்கள் வந்துவிட்டால் பல்வேறு நிறுவனங்களுக்கும் விளம்பரம் செய்ய தொடங்கிவிடுகின்றனர். சிலர் தங்களுக்கென ஒரு பிராண்டை உருவாக்கி அதை கொண்டு வருமானம் பார்க்கின்றனர். இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவர்கள் இருந்தாலும், சிலருக்கு இது ஒரு போதையாகவே மாறிவிடுகிறது. வீடியோ வெளியிட ரிஸ்க் எடுத்து சிலர் தங்கள் உயிரை இழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இனி Instagram பயன்படுத்த KYC கட்டாயமா? என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications