ஒரே நாளில் 14 பில்லியன் டாலர் சொத்து காலி.. சீன பணக்காரர் ஓரே அழுகாச்சி..!

பெய்ஜிங்: சீனாவின் பணக்காரர் ஒருவர் ஒரே நாளில் தன்னுடைய சொத்து மதிப்பில் இருந்து 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். பிபிடி ஹோல்டிங்ஸ் என்ற சீன நிறுவனத்தின் தலைவர் தான் காலின் ஹுவாங். இவர் டெமு என்ற சீனாவின் புகழ்பெற்ற இ -காமெர்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 14 பில்லியன் டாலர்கள் குறைந்திருக்கிறது.

பிபிடி நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவடைந்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இத்தனை கால தொழில் வாழ்க்கையில் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான சொத்தை அவர் இழப்பது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் 14 பில்லியன் டாலர் சொத்து காலி.. சீன பணக்காரர் ஓரே அழுகாச்சி..!

இந்த சரிவால் சீன பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர் தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு 35.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மீண்டும் சீனாவின் பணக்காரர் என முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஸோன் சாங்சாங் , தற்போது அவரது சொத்து மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

சீனாவை பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் டெமு இ-காமர்ஸ் தளத்தின் உரிமையாளரான ஹுவானின் சொத்து மதிப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. சீனாவில் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாக இருந்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 71.5 பில்லியன் டாலர்களை எட்டியது.

இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த ஹூவான் கடந்த 2015 ஆம் ஆண்டு பிபிடி ஹோல்டிங்ஸ் சென்ற நிறுவனத்தை தொடங்கினார் .இந்த நிறுவனத்தின் கீழ் இகாமர்ஸ் தளங்கள் மற்றும் வீடியோ கேம் நிறுவனங்களை இவர் உருவாக்கி நடத்தி வந்தார். இதன் காரணமாக இவரது சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்து வந்தது.

கடந்த காலாண்டில் பிபிடி நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் குறைந்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரே நாளில் 29 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.

டெமு நிறுவனம் சீனாவில் அதிகபட்ச தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய இ-காமர்ஸ் தளமாகும். இந்த நிறுவனம் அமெரிக்காவிலும் புகழ்பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறது.

இந்த நிறுவனம் காரணமாக தங்களுடைய தொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீனாவை சேர்ந்த சிறு தொழிலாளர்கள் அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். மற்ற நாடுகளிலும் கூட இந்த நிறுவனம் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதால் தங்களுடைய பொருட்கள் விற்பனை குறைந்து இருப்பதாக உள்நாட்டு வியாபாரிகள் புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+