ச்சீ... பக்கத்து வீட்டுக்காரன் வாத்த திருடி தான் BMW-க்கு பெட்ரோல் போட்றியா..?

விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால், பக்கத்து வீடுகள், விளை நிலங்களில் சுற்றித் திரிந்த வாத்து மற்றும் கோழிகளை திருடி மாட்டிக்கொண்டுள்ளார் ஒரு சீன விவசாயி.

பீஜிங்: தெற்கு சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) காருக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால், பக்கத்து வீடுகள், விளை நிலங்களில் சுற்றித் திரிந்த வாத்து மற்றும் கோழிகளை திருடி விற்று அந்தப் பணத்தை கொண்டு தன்னுடைய காருக்கு பெட்ரோல் நிரப்பியது தெரியவந்துள்ளது.

கடைசியில் விவசாயி கோழியை திருடிய விசயம் போலீசாருக்கு தெரிந்துதும் தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் தப்பிக்கு முயற்சித்து செய்துள்ளார். ஆனால் அங்கிருந்த சாலைகள் குறுகலாக ,இருந்ததால் மேலே செல்ல முடியாமல் போலீசில் மாட்டிக்கொண்டார். இந்த விசயம் தற்போது சீனாவில் வைரலாக பரவி வருகிறது.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் அனைவருக்கும் அட்லீஸ்ட் ஒரு காராவது வாங்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம். இன்னும் சிலபேர் கொஞ்சம் முயற்சி செய்து பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த காரை வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவது வாடிக்கை. ஆனால் கார் வாங்குவதைப் பற்றி மட்டுமே யோசிக்கும் அவர்கள் அந்தக் காருக்கு பெட்ரோல் போடுவது, காரை எப்படி பராமரிப்பது என்று தெரிவதில்லை.

 அவஸ்தை படும் சீன விவசாயி

அவஸ்தை படும் சீன விவசாயி

அவசர அவசரமாக பிள்ளையெ பெத்துக்கிட்டு சாவகாசமா அவஸ்தை படுறான் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பு அதைப் பற்றி யாராவது நல்ல ஐடியா சொன்னால் காதில் கேட்கவே மாட்டார்கள். நம்மை விரோதியாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் பின்னாடி அந்த விசயத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும்போது தான் அவர்களுடைய எட்டாவது அறிவுக்கு அது எட்டும். அதுபோலத்தான் சீனாவில் ஒருவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கி அவஸ்தைப்பட்டது.

காருக்கு பெட்ரோல்

காருக்கு பெட்ரோல்

தென்மேற்கு சீனாவிலுள்ள சிசுவான் (Sichuan) மாகாணத்திலுள்ள லின்ஷூவி (LinShui County) பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இது மாதிரி தான் எப்படியாவது கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்துவைத்து விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அதை எப்படி பராமரிப்பது, பெட்ரோல் போடுவதற்கு பணம் வேண்டுமே என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் பிஎம்டபிள்யூ காரை மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

பெட்ரோல் போட பணமில்லை

பெட்ரோல் போட பணமில்லை

பிஎம்டபிள்யூ காரை வாங்கிய சில நாட்களிலேயே அவருக்கு நாக்கு தள்ளிவிட்டது. காரை எங்கு எடுத்துச் சென்றாலும் அதற்கு பெட்ரோல் போடுவதற்கும், அடிக்கடி பராமரிப்பதற்குமே ஏகப்பட்ட செலவாகிறது என்று அந்த மர மண்டைக்கு உறைத்தது. ஆனால் பெட்ரோல் போடவேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தார்.

பெட்ரோலுக்கு திருட்டு

பெட்ரோலுக்கு திருட்டு

அந்த நேரத்தில் தான் அவருடைய பண்ணைக்குள் சில வாத்துகளும் கோழிகளும் உலவிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டது. ஆனால் அவை அவருக்கு சொந்தமானது இல்லை. இருந்தாலும் என்ன செய்வது பெட்ரோல் போட்டாக வேண்டுமே. உடனே அவர் யோசிக்க ஆரம்பித்தார். யோசனையை செயலிலும் காட்ட ஆரம்பித்துவிட்டார். உடனே அந்த கோழிகளையும் வாத்துகளையும் பிடித்து வைத்து சிறிது நாட்கள் வளர்த்து அதை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் பெட்ரோல் போடவும், காரை பராமரிப்பதையும் செய்து வந்துள்ளார்.

 திருடிய காசில் பெட்ரோல்

திருடிய காசில் பெட்ரோல்

நாளடைவில் தன் காருக்கு பெட்ரோல் போட வேண்டி தினமும் தன்னுடைய பைக்கில் சென்று வெட்ட வெளியில் திரியும் மற்றவர்களின் வாத்து மற்றும் கோழிகளை திருடிக்கொண்டு வந்து சில காலம் வரையிலும் தன்னுடைய பண்ணையில் வைத்து வளர்த்து அவை பெரிதான உடன் அவற்றை விற்று அதில் வரும் பணத்தில் பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் போட்டும், பராமரிப்பு செலவையும் செய்து வந்தார்.

கெட்ட நேரம் பிடிபட்டார்

கெட்ட நேரம் பிடிபட்டார்

ஆனால், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்வதைப்போல், அந்த விவசாயியின் தில்லாலங்கடி வேலைகள் லின்ஷூவி பகுதியிலுள்ள போலீசாருக்கு தெரியவந்தது. போலீசாரும் அந்த விவசாயியை பிடிக்க விரைந்து சென்றனர். போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்த அந்த விவசாயி தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் ஏறி தப்பிச்செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவருடைய கெட்ட நேரம் அந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருந்ததால் காரை வேகமாக ஒட்ட முடியவில்லை. இத்ந வாய்ப்பை பயன்படுத்தி போலீசார் அந்த விவசாயியை பிடித்து விட்டனர். விவசாயி ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் போடவும் பராமரிக்கவும் வாத்து, கோழிகளை திருடிய சம்பவம் சீனாவில் வைரலைக பரவி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+