எரியும் நெருப்பில் எண்ணெய் எண்ணெய் ஊற்றுவதைப் போல் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் பிரச்சனை வெடித்துள்ள இந்த நேரத்தில் அமெரிக்காவில் சீனா செய்த முதலீட்டு அளவுகள் குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்க முதலீட்டாளர்களையும், அமெரிக்க அரசையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
30 சதவீத சரிவு
2016ஆம் ஆண்டு அமெரிக்காவில், சீனா செய்த முதலீட்டு அளவு வரலாறு காணாத உச்சத்தை அடைந்த நிலையில் 2017இல் 30 சதவீதம் வரையில் சரிந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்காவில் இருக்கும் சீன நிறுவனங்களின் 2018 வருடாந்திர வர்த்தக ஆய்வு அறிக்கையில் சீனா ஜெனரல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
விரிசல்
பொதுவாக அன்னிய முதலீடு என்பது வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாடும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கும். இந்நிலையில் சீனாவும், அமெரிக்காவும் நிலையான வளர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில் சீனா தனது முதலீட்டைக் குறைத்துள்ளதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கா-சீனா இடையில் வெடித்துள்ள வர்த்தகப் போர் உள்ளது.
அமெரிக்க அரசு
மேலும் இந்த முதலீட்டு சரிவுக்கு வர்த்தகப் போரை தாண்டி ஒரு முக்கியமான காரணம் உள்ளதாகச் சீனா ஜெனரல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு சீனா நிறுவனங்களும், சீன முதலீட்டாளர்களும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தருவதில்லை என அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
டிரம்ப் முடக்கம்...
தற்போது அமெரிக்காவில் உருவாக்கியுள்ள டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் முக்கிய நிறுவனங்களின் பல திட்டங்கள் முடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் சீன நிறுவனங்களால் விரிவாக்கப் பணிகளும், புதிய முதலீட்டையும் செய்ய முடியாமல் தவிக்கிறது.
இதன் காரணமாகவே கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவில் சீன முதலீடு அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications