கடன் செலுத்தாதவர்கள் டிஜிட்டல் பேமெண்ட் யூஸ் பண்ண கூடாது, விமானத்தில் பயணிக்க கூடாது - சீன அரசின் வினோத கட்டுப்பாடுகள்.
சீனா: 2024ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சீன பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதே வேகத்தில் தனிநபர் கடன்களும் வளர்ந்திருப்பது சீன அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடன்களை செலுத்தாத தனிநபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதிப்பது தெரிய வந்துள்ளது.

தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், நீண்ட காலம் கடன்களை செலுத்தாத தனிநபர்களை கருப்பு பட்டியலில் அரசு சேர்க்கிறது. இப்படி கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50% உயர்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
தற்போது 8.3 மில்லியன் பேர் இந்த பட்டியலில் உள்ளனர். இது சீனாவின் வேலை செய்யும் வயதில் இருக்கும் மக்கள் தொகையில் 1% ஆகும்.
இப்படி கடன்களை செலுத்தாத தனிநபர்களுக்கு அதில் இருந்து மீண்டு வர எதுவும் செய்யாத சீன அரசு , மாறாக அவர்களை பல வழிகளில் தண்டிப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடனாளிகள் சுங்கம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் செய்ய கூடாது, ஆன்லைனின் டிக்கெட்டுகளை வாங்க கூடாது, மின்னணு பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தக் கூடாது என நிபந்தனைகளை விதித்துள்ளது.
சீனாவில் உள்ள பெரும்பாலான கடைகள் பணமாக பெறுவதை நிறுத்தி முற்றிலும் டிஜிட்டலாக மாறி இருப்பதால், இவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் சிக்கலாகிவிட்டது.
கடன்களை செலுத்தாத தனிநபர்கள் அதிவேக ரயில் சேவை, விமானம் ஆகியவற்றை பயன்படுத்துவது, இன்சூரன்ஸ் திட்டங்கள் வாங்குவது, சுற்றுலா செல்வது, பெரிய ஹோட்டல்களில் தங்குவது ஆகியவற்றுக்கும் சீன அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறுவோர் கைது செய்யப்படுவர் என வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தி தெரிவிக்கிறது.
அரசின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் புதிதாக கடன் வாங்க முடியாது, அரசு பணிகளில் சேர்ந்து பணியாற்ற முடியாது என பல கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. ஒருவேளை கடன்களை செலுத்தாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தால் கடன் போக மீத தொகையை அரசு கொடுப்பதில்லை என தெரிகிறது.
கடன்களை திரும்ப செலுத்தும் வாய்ப்பு இருந்தும் அதனை செலுத்தாமல் தவிர்க்கும் நபர்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி இருப்பதாக சீன அரசு முன்பு கூறி இருந்தது. ஆனால் உண்மை நிலவரம் மாறாக இருக்கிறது, கடனை திரும்ப செலுத்தும் வாய்ப்பே இல்லாதவர்களும் தண்டிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
சீனாவில் 2020ஆம் ஆண்டு கடன்களை திரும்ப செலுத்தாத நபர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியனாக இருந்துள்ளது. இது 2024இல் 8.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் வீட்டுக்கடன் வாங்கியவர்களே அதனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளனர் என தெரியவருகிறது. அதே போல கிரெடிட் லைன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிக்கும் போக்கு மக்களிடையே அதிகரித்ததும் காரணம் என சொல்லப்படுகிறது.
சீன மக்கள் தங்கள் வருமானத்துக்கு அதிகமாக செலவழிக்க தொடங்கிவிட்டனர் தற்போது அந்த பழக்கம் அவர்களை கடனாளியாக்கியுள்ளது. இதனிடையே கடனாளிகளுக்கு அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் அவர்கள் கடனை அடைப்பதற்கு எந்த உதவியும் செய்யவில்லை மாறாக மேலும் மேலும் சிக்கலில் தள்ளுகிறது என இது வளர்ந்து கொண்டே போகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவில் உள்ளதை போல திவால் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தால் தீர்வு கிடைக்கும் என சீனாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் லீ சுக்னாங் கூறியுள்ளார்.
story written by: Devika
More From GoodReturns

ஹோம் லோன் இன்சூரன்ஸ்:உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்கு இது ஒரு பாதுகாப்பு கேடயமா? வாங்குவது லாபமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications