வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் சீன மாணவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை வர்த்தகத்தினை கையில் எடுத்து வந்த அமெரிக்கா, அடுத்து சீன மாணவர்களை ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விசாக்களை நீட்டிப்பதில் சிக்கலை கொண்டு வரலாம் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா சீனா இடையிலான பிரச்சனையினால், அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களை வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை
இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், சீனா மாணவர்களின் விசாக்களை ரத்து செய்வதற்கான முன்மொழிவினை, அமெரிக்கா பரிசீலித்து வருவதாக இதையறிந்த நான்கு அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் ஜனாதிபதி டிரம்ப் இதில் கையெழுத்து இடவில்லை என்றும் கூறப்படுகிறது.
முடிவு வரலாம்
அமெரிக்கா சீனா பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி வரும் வாரங்களில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த அதிரடியான முடிவு, உளவு அல்லது அறிவுசார் சொத்து திருட்டில் ஈடுபடுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயத்தினை முன் வைக்கும் மாணவர்களை மட்டுமே பாதிக்கும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் இதனால் பிரச்சனை இல்லை என்று கூறப்படுகிறது.
எத்தனை பேர் வெளியேற்றப்படலாம்?
இவ்வாறு பிரச்சனையில் உள்ள மாணவர்களை மட்டுமே இது பாதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் குறுகியதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் மத்தியில் கூறப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. அமெரிக்காவில் சீனாவின் பல ஆயிரம் மாணவர்கள் இருந்தாலும், அதில் எத்தனை பேரை இதன் மூலம் வெளியேற்ற முடியும் என்று அதிகாரிகளால் கூற முடியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனா இரானுவத்துடன் தொடர்பா?
முதலில் இந்த திட்டம் அமெரிக்காவின் பல்கலைகழகங்கள் மற்றும் கல்வியாளர் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இது மிக கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சீன பல்கலைக் கழகங்கள் உடனான உறவை அவர்கள் எவ்வாறு வரையறுக்கப் போகிறார்கள். எந்த வகையான பல்கலைக் கழகங்களை அவர்கள் குறி வைக்கப் போகிறார்கள். சீனா இராணுவத்துடன் தொடர்பு கொண்ட பல்கலைக் கழகம் எது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும், அதிகாரிகள் மத்தியில் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சீன மாணவர்கள்
கடந்த 2018 -19ம் கல்வியாண்டில் மட்டும் சீனாவிலிருந்து 1,33,396 பட்டதாரிகள் அமெரிக்காவில் பயின்றுள்ளனர். இவர்கள் மொத்த பட்டதாரி மாணவர்களில் 36.1% பேர் ஆகும். சர்வதேச கல்வி நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஒட்டுமொத்தமாக சீனாவிலிருந்து 3,69,548 மாணவர்கள் உள்ளதாகவும், இது சர்வதேச மாணவர்களில் 33.7% பேராகும். இது கடந்த 2018ம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் 15 பில்லியன் டாலர் பங்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச பங்கு சந்தைகள்
ஆக இவ்வாறு விசாக்களை ரத்து செய்தால் இது அமெரிக்கா சீனா தொடர்பான பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா சீனா பிரச்சனைகள் சர்வதேச பங்கு சந்தைகள் சரிந்து வரும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications