மரணத்தை வெல்ல திட்டமா? சீன அதிபர் ஸீ ஜின்பிங் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான ரகசிய உரையாடல் லீக்!

சீனா: இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீனாவின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீன அதிபர் ஸீ ஜின் பிங், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் கலந்துரையாடும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகின. இந்த மூவரும் தனக்கு எதிராக சதி செய்கின்றனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட தன் தரப்புக்கு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

மரணத்தை வெல்ல திட்டமா? சீன அதிபர் ஸீ ஜின்பிங் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான ரகசிய உரையாடல் லீக்!

இந்த சூழலில் இந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தபோது ரஷ்ய அதிபர் புதினும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் பேசிய உரையாடல்கள் தற்போது லீக் ஆகியுள்ளன. மூவரும் அணிவகுப்பை காண நடந்து வரும் போது இந்த உரையாடல் நடக்கிறது. புதின் கூறுவதை ஒரு மொழி பெயர்ப்பாளர் சீன மொழியில் ஸீ ஜின்பிங்கிற்கு மொழி பெயர்க்கிறார்.

இந்த உரையாடலில் இருவரும் மரணத்தை வெல்வது குறித்து விவாதித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இந்த உரையாடல்கள் தெளிவாக கேட்கின்றன. சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவருமே தற்போது 72 வயதாக கூடியவர்கள். இவர்கள் 150 வயது வரை வாழ்வது தொடர்பாக பேசி இருக்கிறார்கள். மனித உறுப்புகளை தொடர்ச்சியாக மாற்றுவதன் மூலம் இது சாத்தியம் என அவர்கள் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சீன அதிபர் ஸீ ஜின் பிங், முன்பெல்லாம் 70 வயது வரை மனிதர்கள் உயிர் வாழ்வதே பெரிய விஷயமாக இருந்தது ஆனால் தற்போது 70 வயதிலும் நீங்கள் குழந்தையைப் போல இருக்கிறீர்கள் என புதினை பார்த்து கூறுகிறார். அதற்கு புதின் இந்த நூற்றாண்டில் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிக்க போகிறது 150 வயது வரை மனிதர்கள் வாழ போகிறார்கள் என பதில் கூறுகிறார். பயோ டெக்னாலஜி துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் மற்றும் மனித உடல் உறுப்புகளை தொடர்ச்சியாக மாற்றுவதன் மூலம் மனிதர்கள் தொடர்ந்து இளமையாக வாழ முடியும் ஏன் மரணத்தை கூட வெல்ல முடியும் என புதின் பதில் அளிக்கிறார். அதனை கேட்டு ஸீ ஜின்பிங் வியந்து போகிறார்.

இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெருமளவில் விவாதிக்கப்படுகிறது . இதனுடைய மரணத்தை வெல்வது குறித்து உரையாடினீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆம் என புதின் பதில் அளித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ரஷ்யா மற்றும் வடகொரியா அதிபர்களை ஓரணியில் வரவழைத்து தனக்கு எதிராக சதி செய்கின்றனர் என சாடினார். ஆனால் இவர்கள் மரணத்தை வெல்வதை பற்றியும் 150 ஆண்டுகள் வாழ்வதை பற்றியும் பேசி இருக்கின்றனர் என்பது தற்போது வெளிவந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+