ப்ரொஃபசர் என்ற உடன் நீங்க மனி ஹெய்ஸ்ட்-க்கு செல்ல வேண்டாம், இது சீனாவில் இருக்கும் உண்மையான ப்ரொஃபசர். உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவில் அதிகளவிலான கவனத்தையும் முதலீட்டையும் செய்து வருகிறது.
ஆனால் இத்துறையில் தொடர்ந்து முன்னோடியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது சீன நிறுவனங்கள்.
சீன நிறுவனங்கள்
சீனாவில் இருக்கும் அனைத்து டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவில் சிறிய அளவிலான முதலீட்டையாவது செய்து தனது வர்த்தகத்தை மெருகேற்றி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு
இப்படி ஒட்டுமொத்த சீன நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஆதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் 2014ல் சீன பல்கலைகழகத்தை சேர்ந்த ப்ரொஃபசர் உருவாக்கிய சென்ஸ்டைம் (SenseTime) என்ற நிறுவனம் ஐபிஓ-வில் கலக்கியுள்ளது.
அமெரிக்க அரசின் தடை
சில வாரங்களுக்கு முன்பாகவே அமெரிக்க அரசு சென்ஸ்டைம் நிறுவனத்தைத் தடை செய்த நிலையிலும் ஹாங்காங் பங்குச்சந்தையில் ஒரு பங்கு 3.85 டாலர் என்ற விலையில் பட்டியலிடப்பட்டுச் சுமார் 5.55 பில்லியன் ஹாங்காங் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்து சுமார் 14 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது. இவை அனைத்தும் கடந்த 7 வருடத்தில் நடந்த மேஜிக்.
அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா மத்தியிலான பதற்றமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்ஸ்டைம் நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடை விதித்த நிலையிலும் ஐபிஓ-வில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது சீனாவின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது.
சென்ஸ்டைம் நிறுவனம்
இந்த ஐபிஓ மூலம் சென்ஸ்டைம் (SenseTime) நிறுவனத்தில் ப்ரொஃபசர் டாங் சியாவோவ் (Tang Xiao'ou) வைத்திருக்கும் 21 சதவீத பங்குகள் மூலம் இவருடைய சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
53 வயதான சென்ஸ்டைம் டாங் சியாவோவ் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் இன்பர்மேஷன் இன்ஜினியரிங் துறையில் ப்ரொஃபசர் ஆக உள்ளார்.
சரி யார் இந்த ப்ரொஃபசர் டாங் சியாவோவ்...
டாங் சியாவோவ்
டாங் சியாவோவ் சீனாவின் சியின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், நியூயார்க் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், இதன் பின் 1996ல் நீருக்கடியில் இயங்கும் ரோபாட்டிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் பிரிவில் MIT கல்லூரியில் இருந்து பிஹெச்டி பட்டம் பெற்றார்.
மைக்ரோசாப்ட்
இதன் பின்பு பல ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் ரிச்ர்ச் ஏசியாவில் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்பு 2014ல் லெனோவோ நிறுவனத்தின் ரிசர்ச் சயின்டிஸ்டான Xu Li உடன் இணைந்து டாங் சியாவோவ் சென்ஸ்டைம் நிறுவனத்தை உருவாக்கினார்.
11 சதவீத சந்தை வர்த்தக
குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த சென்ஸ்டைம் நிறுவனம் ஒட்டுமொத்த ஆசியாவில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் சுமார் 11 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.
சீன காவல்துறை
சென்ஸ்டைம் தற்போது மனித முகங்களைக் கண்டறியும் (facial recognition) தொழில்நுட்ப சேவையைச் சீன காவல்துறைக்கு அளித்து வருகிறது, திரைப்படத்தில் டிஜிட்டல் முறையில் பொருட்களை வைக்கும் சேவையை அளித்து வருகிறது, சீனாவின் டென்சென்ட் மொபைல் மேகம்களில் ஆகுமெண்ட் ரியாலிட்டி சீன்-ஐ உருவாக்கும் தொழில்நுட்ப சேவையை அளிக்கிறது.
உய்குர் முஸ்லீம் அடக்குமுறை
அமெரிக்க அரசு, சீனாவில் சின்ஜியாங் பகுதியில் இருக்கும் உய்குர் முஸ்லீம் மக்களின் மீதான சீன அரசின் அடக்குமுறைக்குச் சென்ஸ்டைம் நிறுவனத்தின் facial recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளது எனக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
அரசு முதலீட்டு நிறுவனங்கள் ஆதரவு
அமெரிக்காவின் தடையால் சென்ஸ்டைம் ஐபிஓ-விற்குப் பெரிய அளவிலான வரவேற்பு இருக்காது எனக் கணித்த நிலையில், சீன அரசு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வமாக முதலீடு செய்த காரணத்தால் சென்ஸ்டைம் நிறுவனத்தின் ஐபிஓ மிகப்பெரிய வெற்றி அடைந்ததுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications