சீனாவின் ராஜதந்திரம்! பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க அரசு ஊழியர்களை வலைவீசி தேடுகிறது உளவு அமைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. இது சீனாவுக்கு தற்போது லாபமாக அமைந்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க அரசு ஊழியர்களை போலி சீன நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவது அம்பலமாகியுள்ளது. அதாவது இவர்களை பணிக்கு அமர்த்தி அமெரிக்கா அரசின் ரகசிய தகவல்களை சீனா திருட முயற்சிப்பது தெரியவந்துள்ளது. சீன நாட்டின் உளவு அமைப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு ரகசிய ஆட்சேர்ப்பு நெட்வொர்க் இந்த வேலையை செய்கிறதாம்.

சீனாவின் ராஜதந்திரம்! பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க அரசு ஊழியர்களை வலைவீசி தேடுகிறது உளவு அமைப்பு!

அமெரிக்காவில் அரசு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை ரகசியமாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு அதிக பணம் மற்றும் அதிக சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு எடுக்க முயற்சி செய்கின்றனவாம். அமெரிக்க அரசு குறித்த சில ரகசிய தகவல்களை இவர்களிடம் இருந்து பெறுவதற்கான முயற்சியே இது என தெரியவந்துள்ளது.

மேக்ஸ் லெஸ்ஸர் என்பவர் இதனை கண்டறிந்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து ராய்ட்டர்ஸும் இவரும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சியான உண்மைகள் வெளிவந்துள்ளன. இதன்படி திடீரென பணிநீக்கம் செய்ததால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் ஊழியர்களை சீன உளவு அமைப்புடன் தொடர்பு கொண்ட சில குறிப்பிட்ட நிறுவனங்கள் தொடர்பு கொள்கின்றன எனக் கூறுகிறார்.

அவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்துவது போல ஆசை வார்த்தை காட்டி பேசி அவர்களுக்கு தெரிந்த அமெரிக்கா அரசு சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களை பெற முயற்சிக்கின்றனர் என கூறியுள்ளார். RiverMerge Strategies, Wavemax Innovation என்பன உள்ளிட்ட பெயர்களில் போலி நிறுவனங்களை சீன உளவு அமைப்பு இதற்கென்று உருவாக்கியிருப்பதாக அவர் கூறுகிறார். இந்த நிறுவனங்களின் பெயரில் போலியாக இணையதளங்கள் கூட தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் இணையதளங்களிலும் , லிங்குடின் உள்ளிட்ட தளங்கள் வாயிலாகவும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் போடப்படுகின்றன.

இவற்றில் இடம்பெற்றிருந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து தான் ஆய்வு மேற்கொண்டதாக மேக்ஸ் லெஸ்ஸர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராய்ட்டர்ஸ் நிறுவனமும் இந்த நிறுவனங்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்திய இவை போலியானவை என்றும் அதில் இடம்பெற்றுள்ள வேலைவாய்ப்பு தகவல்கள் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் போலியானவை என்பதை கண்டறிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு , அரசு செயல் திறன் துறை என்ற ஒரு துறையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார். அரசின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும், செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த துறை சார்பாக அண்மையில் தான் பல்வேறு அரசு ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பாக அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை அணுகக்கூடிய செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொண்ட சிலர் கூட பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தான் தற்போது இந்த சீன உளவு அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு தருவதாகவும் அதிக சம்பளம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனவாம். இவ்வாறு வேலைக்கு சேர்பவர்களிடம் அரசின் ரகசிய தகவல்களை வழங்க வேண்டும் அல்லது இதே போல அரசின் ரகசிய தகவல்களை தெரிந்த நபர்களின் தொடர்பினை வழங்க வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்களாம்.

இந்த சீன நிறுவனங்கள் அண்மையில் அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விளம்பரம் செய்து இவர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கின்றன., குறிப்பாக அவர்களின் நிதி நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், சீனா எப்பொழுதுமே அமெரிக்காவை உளவு பார்ப்பதற்கு இப்படி மோசமான உத்திகளை தான் கையாளுகிறது என சாடியுள்ளார்.

அதேவேளையில் அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரக அதிகாரி எந்த ஒரு அமெரிக்க தகவல்களையும் திருட நாங்கள் முயற்சி செய்யவில்லை எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடுகளின் தரவு தனியுரிமைக்கு நாங்கள் மரியாதை தருகிறோம் என கூறியுள்ளார்.

சீனாவை பொறுத்தவரை அமெரிக்காவில் இதுபோல ஆட்களை பணிக்கு அமர்த்தி அமெரிக்க அரசு தகவல்களை திருடன் முயற்சிப்பது இது முதல் முறை கிடையாது. 2020 ஆம் ஆண்டு சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார் .கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அமெரிக்காவில் போலியாக ஒரு கன்சல்டிங் நிறுவனத்தை தொடங்கி ஊழியர்களை பணிக்கு எடுத்தது தெரிய வந்தது.

குறிப்பாக அரசு வேலையில் இருந்து வந்த ஊழியர்களை பணிக்கு எடுத்து அவர்களிடம் சில தகவல்களைப் பெற்று சீன உளவுத்துறைக்கு அனுப்பி வைத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதற்காக சீன உளவு அமைப்பு சார்பாக தனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு வேலையில் இருந்து திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு நிதி ரீதியாக சிக்கலில் இருப்பவர்கள், அரசு வேலையில் அதிருப்தியில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்களை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என தனக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த நபர் நீதிமன்ற விசாரணையில் கூறியிருந்தார்.

தற்போது அதேபோன்ற ஒரு உத்தியை தான் சீன உளவு அமைப்பு பயன்படுத்த தொடங்கி இருக்கிறது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் தீவிரமடைந்து வருவதால் சீன நிறுவனங்களின் இது போன்ற செயல்பாடுகள் இன்னும் தீவிரமடையும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இது அமெகரிக்க அரசு தரவுகளுக்கு புதிய அச்சம் உருவாக்கியுள்ளதா அச்சம் நிலவுகிறது.

இதுபோல அரசு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக விளம்பரங்களை வெளியிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவற்றின் முகவரி உள்ளிட்ட அவற்றை ஆய்வு செய்தபோது அவை அளித்திருந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதை கண்டறிந்து இருக்கிறது ராய்ட்டர்ஸ் நிறுவனம். சீன உளவு அமைப்பின் இந்த செயல்பாடு அமெரிக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா பல்வேறு வழிகளில் தங்களை உளவு பார்ப்பதாகவும், அமெரிக்கர்களின் தகவல்களை திருடுவதாகவும் அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே அங்கே டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல சீன பிராண்டுகளின் ஸ்மார்ட் கருவிகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+