அமெரிக்க பிராண்டுகளை தோலுரித்துக் காட்டும் சீனா.. டிவிட்டரில் தீயாய் பரவும் வீடியோ..!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இதனை எடுத்து சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தகப் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய டிரெண்டினை கொண்டு வந்திருக்கின்றன . அமெரிக்காவை சேர்ந்த முன்னணி பிராண்டுகளின் பொருட்களை குறைந்த விலைக்கு நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

அமெரிக்க பிராண்டுகளை தோலுரித்துக் காட்டும் சீனா.. டிவிட்டரில் தீயாய் பரவும் வீடியோ..!!

அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் விட்டன், பாபி பிரவுன், பிர்க்கின் உள்ளிட்ட முன்னணி ஆடம்பர பிராண்டுகளின் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன . ஹேண்ட் பேக்குகள், ஷூக்கள், பெல்ட்டுகள் உள்ளிட்ட இந்த பொருட்களை தயாரிப்பதற்கான செலவு மிகவும் குறைவுதான் ஆனால் இந்த பெரு நிறுவனங்கள் தங்களுடைய பிராண்ட் பெயரை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன .

தற்போது சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் இந்த பெரிய நிறுவனங்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளன. சீனாவில் இந்த பெரிய பிராண்டுகளுக்கான ஹேண்ட் பேக், ஷூக்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக தாங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு இவற்றை விற்பனை செய்ய இருப்பதாகவும் இந்த பெரிய பெரிய பிராண்டுகள் விற்பனை செய்யும் விலையை விட பல மடங்கு குறைவாக நாங்களே நேரடியாக இதனை உங்களுக்கு வழங்குகிறோம் என்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்துள்ளன.

எக்ஸ் மற்றும் டிக்டாக்கில் தற்போது இந்த வீடியோக்கள் தான் வைராகியுள்ளன. சீனாவை சேர்ந்த இந்த விநியோக நிறுவனங்களின் வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் எந்த ஆடம்பர நிறுவனத்திற்கான பொருட்களை தயாரித்து வழங்குகிறோம் அதன் உற்பத்தி செலவு எவ்வளவு அதை அவர்கள் விற்கும் விலை எவ்வளவு என்பதை மிக விரிவாக பதிவு செய்துள்ளன.

பிர்க்கின் நிறுவனத்திற்கு பை தயாரித்து வழங்கக்கூடிய ஒரு நிறுவனம் இந்த பையை உற்பத்தி செய்வதற்கு எங்களுக்கு ஆகக்கூடிய செலவு 1.2 லட்சம் ரூபாய் ஆனால் உங்களிடம் இதனை 29 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இந்த பையை தயாரித்து வழங்கும் எங்களுக்கு பெரிய லாபம் கிடையாது, பெரிய பெரிய பிராண்டுகள் தான் இந்த லாபத்தை தங்களுடைய சட்டை பைக்குள் போட்டுக் கொள்கின்றன என அதனை தயாரிப்பவர் கூறுகிறார்.

அதேபோல நாங்கள் இந்த பயிர்களை உங்களுக்கு பெரிய நிறுவனங்கள் விற்கும் விலையை விட பல மடங்கு குறைவான விலைக்கு தருகிறோம் எங்களிடமே நீங்கள் நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என அதில் சீன நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இது அமெரிக்காவை சேர்ந்த ஆடம்பர பிராண்ட் நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பொருட்களை அவர்கள் எப்படி எல்லாம் உற்பத்தி செய்கிறார்கள் எப்படி இவை தரம் பார்க்கப்படுகின்றன என்பது குறித்த விரிவான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன .

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளன. அமெரிக்கா அரசு தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 145 சதவீதமாக வைத்திருக்கிறது. சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+