பெய்ஜிங்: அமெரிக்கா சீனா பிரச்சனையினால் இரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது எனில், மறுபுறம் இரு நாடுகளின் முக்கிய வணிக நிறுவனங்களும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இதற்கு சிறந்த உதாரணமே ஹூவாய் நிறுவனம் தான். ஏனெனில் அமெரிக்கா தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்களிடம், ஹூவாயின் எந்த பொருளையும் வாங்க கூடாது என அமெரிக்கா கூறியுள்ளது.
இது சீனாவின் மிகப்பெரிய உலகளாவிய பிராண்டான ஹுவாயினை மற்ற, உலக நாடுகளுமே பயன்படுத்த சற்று யோசிக்கின்றன. இதனை அமெரிக்க அதிபர் வாங்க வேண்டாம் என மற்ற நாடுகளிடம் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம்
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் சீனாவின் ஹூவாய் நிறுவனம் கவனம் செலுத்தியது. இதன் காரணமாக ஹூவாய் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகவும் உருவெடுத்தது. குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் switching gear உற்பத்தியிலும் மிகப்பெரிய நிறுவனமான உருவெடுத்தது எனலாம். இதற்கு ஒரு வகையில் அமெரிக்காவும் கூட காரணம் என்று கூறலாம்.
அதிகரிக்கும் நெருக்கடி
அமெரிக்கா தனது சிப்கள் மற்றும் கூகுளின் மிகப்பெரிய மியூசிக் செயலி, மற்ற ஸ்மார்ட்போன் உபகரணங்களுக்கு தடை விதித்ததால், ஹூவாய் நிறுவனம் தனது சொந்த செயலி மற்றும் சிப்களை உருவாக்கியது. கடந்த ஆண்டு அதன் விற்பனையானது 19% அதிகரித்து 123 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. இதற்கிடையில் தற்போது வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்குடனான அதிகரித்து வரும் பிரச்சனையில், அமெரிக்கா மட்டும் அல்லாது மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் நெருக்கடியினை கொடுத்து வருகிறது அமெரிக்கா.
ஹூவாயினை தவிர்க்கும் மற்ற நாடுகள்
ஐரோப்பிய சந்தைகள் மற்றும் மற்ற மொபைல் போன் சந்தைகள் ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து, தொலைத் தொடர்பு பொருட்களை வாங்கி வந்தன. ஆனால் அவையும் தற்போது அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் பொருட்களை தவிர்த்து வருகின்றன. எனினும் இதில் நல்ல விஷயம் என்னவெனில் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தினையும் மிஞ்சி ஹூவாய் நம்பர் 1 நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை
வெளி நாடுகளில் ஹூவாயின் தேவை குறைந்து வந்தாலும், உள்நாட்டில் அதன் தேவையானது அதிகரித்து வருவது ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஹீவாய் நிறுவனம் எதிர்பாராத விதத்தில் சீனாவிக்கு வெளியே தனது சந்தையினை இழந்து வருகிறது என்று தொழில் துறை ஆய்வாளர் பால் புடே கூறியுள்ளார்.
வணிக உரிமம் வேண்டும்
சமீபத்தில் டிரம்ப் நிர்வாகமானது வணிக உரிமம் இல்லாமல், அமெரிக்கா அல்லாத நிறுவனங்கள் அமெரிக்கா தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதை இது தடுக்கும் என்று கூறப்பட்டது. உண்மையில் இது சீனாவுக்கு பெருத்த அடியாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஹூவாய் நிறுவனத்தின் வணிகத்தலைவர் ரிச்சர்ட் யூ ஸ்மார்ட்போன்களுக்கான சிப்கள் விற்பனை முடங்கியுள்ளது.
ஹூவாய்க்கு பெரிய இழப்பு
செப்டம்பர் 15 நிலவரப் படி, ஒப்பந்ததாரர்கள் சிப்கள் வடிவமைப்பாளர்களை நிறுத்த கட்டாயபடுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் ரிச்சர்ட் கூறியுள்ளார். சுத்தமான நெட்வொர்க்குகள் என அழைக்கப்படும் ஒரு முயற்சியில், டிரம்ப் நிர்வாகம் பாதுகாப்பு அபாயங்களை குறி வைத்து வரும் பட்டியலில், சீனா தொழில் நுட்பங்களின் பெயர்கள் முதலில் இடம் பெற்றுள்ளன. இதில் ஹூவாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
டிக் டாக் வீசாட்டுக்கு தடை
இதோடு சீனாவின் மிகப்பெரிய ஸ்டார்டப் நிறுவனமான டிக் டாக் மற்றும் வீசாட் செயலியையும் அமெரிக்கா சமீபத்தில் தடை செய்துள்ளது. ஆனால் சில நிபுணர்கள் தரப்பில் ஹூவாய் நிறுவனத்தினை தடை செய்வது எந்த விதத்திலும் மற்ற நாடுகளுக்கு பயனாக அமையாது என்கிறது ஒரு அறிக்கை. ஹூவாய் நிறுவனம் 1987ல் முன்னாள் இராணுவ பொறியாளர் ரென் ஜெங் என்பவரால் நிறுவப்பட்டது.
ஆதாரம் இல்லா குற்றச்சாட்டு
அமெரிக்க குற்ற சாட்டுகளை நிராகரித்த சீன அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படும் ஒரு போட்டியாளரை தடுக்க, ஆதாரம் இல்லாமல் அமெரிக்கா குற்றம் சாட்டுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தாய்வான் உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகளும் சீனாவின் பயன்பாட்டை எப்படி குறைப்பது என விவாதித்து வருகின்றன.
விற்பனையை அதிகரிக்க திட்டம்
ஆக சீனாவின் உள்நாட்டு விற்பனையானது அதிகரித்தாலும், அதன் வெளி நாட்டு சந்தையில் விற்பனை, கடந்த ஆண்டை விட 27% சரிந்துள்ளதாக தெரிகிறது. சில நாடுகள் சீன சந்தையினை தவிர்த்தாலும், ரஷ்யா, துருக்கி மற்றும் சீனாவுடன் நெருக்கமான சந்தைகளில் தனது விற்பனையை ஹூவாய் முடுக்கியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த ஒற்றை நடவடிக்கையால் சீனாவின் தொழில் நுட்ப ஜாம்பவான் ஆன ஹூவாய் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது உண்மையே.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications